cinema

2024 சிறந்த தமிழ் பட நடிகைகள்:

Image credits: Social Media

தங்கலான் - பார்வதி:

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' படத்தில் நடிகை பார்வதி 4 குழந்தைகளுக்கு அம்மாவாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
 

Image credits: Instagram

அமரன் - சாய் பல்லவி:

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரூ.400 கோடி வசூல் செய்த இந்த படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
 

Image credits: Social Media

வாழை - ஜானகி:

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான, வாழை படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஜானகியின் நடிப்பு பாராட்டுக்களை குவித்தது.

Image credits: our own

ராயன் - துஷரா விஜயன்:

தனுஷ் நடித்து இயக்கி இருந்த அவரது 50-ஆவது படமான, 'ராயன்' படத்தில் தனுஷுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த துஷாரா நடிப்பு மிகவும் துணிச்சல் மிகுந்ததாக இருந்தது.

Image credits: Google

கோட் - சினேகா:

வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'கோட்' படத்தில் ஹீரோயினாக சினேகா நடித்திருந்த நிலையில், சினேகா மிகவும் எதார்த்தமாக இந்த படத்தில் நடித்திருந்தார். 
 

Image credits: our own

அரண்மனை 4 - தமன்னா:

இதுவரை ரசிகர்கள் பார்த்திடாத ஒரு தமன்னாவை 'அரண்மனை 4' திரைப்படம் மூலம் சுந்தர் சி பார்க்க வைத்தார். மிகவும் எமோஷ்னலாக இந்த படத்தில் நடித்திருந்தார். 
 

Image credits: our own

டிமான்டி காலனி 2 - பிரியா பவானி ஷங்கர்:

படு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி ஷங்கர், ஹாரர் கதைக்களத்தில் நடித்த 'டிமான்டி காலனி 2' படத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். 
 

Image credits: google

கீர்த்தி சுரேஷ் - ரகு தாத்தா:

நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து இந்த ஆண்டு வெளியான 'ரகுதாத்தா' திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவினாலும், கீர்த்தியின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
 

Image credits: Social Media

லப்பர் பந்து - ஸ்வாசிகா:

இந்த ஆண்டு ஸ்மால் பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று லப்பர் பந்து. இந்த படத்தில் கெத்து மனைவியாக நடித்த, ஸ்வாசிகா நடிப்பு கவனிக்கப்பட்டது.

Image credits: instagram.com/swasikavj

ஜே பேபி - ஊர்வசி:

எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் புகுந்து விளையாடும் ஊர்வசி... இந்த ஆண்டு வெளியான ஜேபேபி படத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Image credits: our own

நான் கறவை மாடா? சண்டைக்கு நின்ற ஊர்வசி; சைலண்டாக டீல் பண்ணிய வாலி

கீர்த்தியின் திருமணத்தில் காஞ்சீவரம் பட்டு புடவையில் மாளவிகா மோகனன்!

பொங்கல் பண்டிகைக்கு போட்டிபோட்டு ரிலீசாகும் படங்கள் என்னென்ன?

வயசானாலும் இளமையோடு இருக்கும் நயன்தாரா-வின் டயட் சீக்ரெட்!