தளபதி விஜய் நடிக்க உள்ள 69-ஆவது படம் குறித்த தகவல் இன்று, மாலை 5 மணிக்கு வெளியானது. இந்நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Tamil
'தளபதி 69' பட சம்பளம்:
ஃபிலிமிபீட் செய்தியின் தகவல் படி, தளபதி விஜய் சம்பள விஷயத்தில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் விதத்தில், 'தளபதி 69' படத்திற்கு ரூ.275 கோடி சம்பளமாகப் பெற உள்ளாராம்.
Tamil
எச்.வினோத்
எச்.வினோத் இயக்க உள்ள இந்த படத்தில், விஜய் வாங்கும் சம்பளம் குறித்து... சில தகவல்கள் வெளியானாலும் தற்போது வரை இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
Tamil
விஜய் 69 பட பட்ஜெட்:
இந்த படத்தின் பட்ஜெட்,கோட் பட பட்ஜெட்டை விட கூடுதல் என கூறப்படுகிறது. விஜய்யின் சம்பளமே 275 கோடி என கூறப்படுவதால், மொத்த பட்ஜெட்டும் 500 கோடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tamil
'GOAT' வசூல்:
விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் வெளியாகி, இதுவரை சுமார் 450 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Tamil
முறையாக இணையும் விஜய் - எச். வினோத்:
விஜய் மற்றும் எச். வினோத் இணைந்து முதல் முறையாக பணியாற்றவுள்ள இந்த படம் முழுக்க முழுக்க வணிக ரீதியான படமாக இருக்கும், என கூறப்படுகிறது.