cinema
ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்த தமிழ் ஹீரோக்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த், 1984-ம் ஆண்டில் மட்டும் 17 படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்குமார் 1990, 1991 ஆகிய ஆண்டுகளில் தலா 15 படங்கள் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவின் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்த மைக் மோகன் 1984-ம் ஆண்டில் மட்டும் 19 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் 1977-ம் ஆண்டில் மட்டும் 19 படங்களில் நடித்திருந்தார்.
80களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சத்யராஜ் 1985-ல் 21 படங்களிலும் நடித்திருந்தார்.
65 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் உச்சநடிகராக வலம் வரும் கமல்ஹாசன் 1978-ம் ஆண்டு 19 படங்களில் நடித்திருக்கிறார்.