ரசிகர்கள் முதன்முதலில் கோவில் கட்டியது நடிகை குஷ்புவுக்கு தான். திருச்சியில் இந்த கோவிலை கட்டினர். பின்னர் 2005-ம் ஆண்டு அந்த கோவிலை இடித்துவிட்டனர்.
நமீதா
நடிகை நமீதா கெரியரின் உச்சத்தில் இருந்தபோது 2008-ம் ஆண்டு ரசிகர்கள் அவருக்கு திருநெல்வேலியில் கோவில் கட்ட முயன்றனர்.
நோ சொன்ன நமீதா
நமீதாவுக்கு இதில் விருப்பம் இல்லாததன் காரணமாக ரசிகர்கள் இந்த கோவில் கட்டும் முடிவை கைவிட்டனர்.
ஹன்சிகா
நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ரசிகர்கள் கோவில் கட்ட உள்ளதாக அறிவித்தனர். ஆனால் ஹன்சிகாவுக்கு அதில் விருப்பம் இல்லாததால் ரசிகர்கள் அதனை கட்டவில்லை.
நயன்தாரா
நடிகை நயன்தாராவுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு கோவில் கட்ட முயன்றனர். ஆனால் நயன்தாரா அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் அந்த முடிவை ரசிகர்கள் கைவிட்டனர்.
நிதி அகர்வால்
நடிகை நிதி அகர்வாலுக்கு கடந்த 2021-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த ரசிகர்கள் கோவில் கட்டி, அதற்கு பலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.
சமந்தா
நடிகை சமந்தாவுக்கு இந்த ஆண்டு கோவில் கட்டப்பட்டது. ஆந்திர மாநிலம் பாபட்லாவில் உள்ள ஆலபாடு என்கிற கிராமத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது.
கோவில் திறப்பு
சமந்தாவின் தீவிர ரசிகரான தெனாலி என்பவர் கட்டியுள்ள இந்த கோவில் சமந்தாவின் பிறந்தநாளான ஏப்ரல் 28-ந் தேதி திறக்கப்பட்டது.