சஞ்சய் தத் பாலிவுட்டின் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். போதைப் பழக்கம், மும்பை குண்டுவெடிப்புகளில் தொடர்பு மற்றும் பல காதல் லீலைகளும் அடங்கும்.
'சஞ்சு' என்ற அவரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் சஞ்சய் தத்தின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டது.
'சஞ்சு' படத்தில், தத் 308 பெண்களுடன் உறவில் இருந்ததாக ஒப்புக்கொள்கிறார். உண்மையில் அவருக்கு நினைவில் இருப்பது அவ்வளவுதான்.
சஞ்சய் தத் பல சக நடிகைகளுடன் காதல் தொடர்பு கொண்டிருந்தார், சில முன்னணி நடிகைகள் உட்பட இவரின் காதல் வலையில் சிக்கியவர்கள் தான்.
சஞ்சய் தத் மற்றும் மதூரி தீட்சித் பல படங்களில் இணைந்து பணியாற்றினர், ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவின, ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை.
சஞ்சய் தத் ரேகாவுடன் தொடர்புடையவர், திருமண வதந்திகள் பரவின. இருப்பினும், யாசர் உஸ்மானின் வாழ்க்கை வரலாறு 'ரேகா: சொல்லப்படாத கதை' இவற்றை வதந்திகள் என்று கூறப்பட்டது.
பல சர்ச்சைகளில் இருந்து மீண்ட இவர் தற்போது தன்னுடைய மனைவி மான்யா மற்றும் இரு குழந்தைகளுடன் சர்ச்சைகளிலில் இருந்து விலகியே இருக்கிறார்.
சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வரும் சஞ்சய் தத், தமிழில் தளபதி விஜய் நடிப்பில் 2023-ல் வெளியான லியோ படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார்.