2023 ஆம் ஆண்டு, இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான, 'துணிவு' திரைப்படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ. 200 கோடி வசூல் சாதனை செய்தது.
2019 ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், ரூ. 85 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.127 கோடி வசூல் சாதனை செய்தது.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியான வலிமை ரூ.125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் ரூ.164 கோடி வசூல் செய்தது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் ரூ.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் ரூ.127 கோடி வசூல் செய்தது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடித்திருந்த இந்த திரைப்படம் ரூ.115 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் ரூ.125 கோடி வசூல் செய்தது.
ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்காக இயக்குனர் எச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம், அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி, ரூ.110 கோடி வசூல் செய்தது.
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், 2013 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் ரூ.55 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.100 கோடி வசூல் செய்தது.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாகி, உலகம் முழுவதும் ரூ.92 கோடி வசூல் சாதனை செய்தது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் ரூ. 35 கோடி பட்ஜெட்டில் உருவாகி சுமார் 79 கோடி வசூல் செய்தது.
2014 ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வீரம் ரூ. 27 கோடி வசூல் சாதனை செய்தது.
இன்று வெளியாகியுள்ள விடாமுயற்சி முதல் நாளே 80 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.