இந்தியன் 2 திரைப்படத்தில் மிஸ் செய்த வெற்றியை, 'கேம் சேஞ்சர்' மூலம் அடைவதில் தீவிரமாக இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
Image credits: Social Media
ராம் சரண்:
நடிகர் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ளனர்.
Image credits: Social Media
400 கோடி பட்ஜெட்:
சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள, இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ள. இந்த பாடல்களுக்காக மொத்தம் 92 கோடியை ஷங்கர் செலவு செய்துள்ளார்.
Image credits: Social Media
ஹைரான பாடல்:
குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹைரான பாடல் தான், இந்தியாவிலேயே அதிக செலவில் உருவான பாடல் என கூறப்படுகிறது.
Image credits: Social Media
17.6 கோடி:
இந்த பாடலை இன்ஃப்ரா ரெட் கேமரா மூலம் இயக்குனர் ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் இந்த கேமராவை பயன்படுத்தியதால் 17.6 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாம்.
Image credits: instagram
இந்தியாவிலேயே ஒரே ஒரு பாடலுக்கு அதிகம் செலவு:
செலவைவிட இந்த படத்தின் விஷுவல்ஸ் வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவிலேயே ஒரே ஒரு பாடலுக்கு அதிகம் செலவு செய்த பாடல் ஹைரான என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image credits: instagram
ரிலீஸ் :
இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் நிலையில், திரைப்படம் ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.