cinema
2005 ஆம் ஆண்டு வெளியான இந்தி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் தமன்னா. அதன் பின்னர் 'ஸ்ரீ' படத்தின் மூலம் தெலுங்கிலும் காலடி எடுத்து வைத்தார்.
இதன் பின்னர் தமிழில் கேடி - வியாபாரி என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். அன்று எப்படி பளீச் அழகில் இருந்தாரோ, அதே போல் தான் இன்று வரை தான் பியூட்டியை பராமரித்து வருகிறார்.
பல்வேறு பேட்டிகளில் தமன்னா தனது அழகு ரகசியங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த அழகு குறிப்புகளைப் பார்ப்போம்.
தனது சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வீட்டிலேயே தயாரிக்கப்படும் முகப்பொடிகள் தான் காரணம் என்று தமன்னா பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
தேன், காபி, சந்தனம் ஆகியவற்றை முகப்பொடியாகப் பயன்படுத்துவதாகத் தமன்னா தெரிவித்துள்ளார். இது சருமத்தைப் பொலிவாக மாற்ற உதவுகிறது.
தமன்னாவின் மின்னும் சருமத்திற்கு மற்றொரு காரணம் தயிர். குளிர்ந்த தயிரில் கடலை மாவைக் கலந்து சருமத்திற்குப் பூசுவதாகத் தமன்னா கூறியுள்ளார்.
முகப்பொடி போட்ட பிறகு ரோஸ் வாட்டரால் முகத்தைச் சுத்தம் செய்வதாகவும், தனது சருமம் ஈரப்பதமாக இருக்க இதுவே காரணம் என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.
உண்ணும் உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவதாகத் தமன்னா தெரிவித்துள்ளார். முக்கியமாக அவகேடோ, ப்ரோக்கோலி போன்ற உணவுகளுடன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.