cinema
சூர்யாவை வைத்து இயக்குனர் வசந்த் இயக்க இருந்த திரைப்படம் ஆசை. சூர்யா கார்மெண்ட் பிஸ்னஸில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
இயக்குனர் எஸ் பி ஜெகநாதன் இயக்கத்தில் வெளியாகி, இயற்கை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான். ஆனால் ரொமான்டிக்காக கதாபாத்திரம் என்பதால் இந்த பட வாய்ப்பை நிராகரித்தார்.
சூர்யா - அசின் நடிப்பில் உருவான, இந்த படத்தின் படபிடிப்பு ஒரு வாரம் நடந்து முடிந்த பின்னர் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கௌதம் மேனன் சூர்யாவுக்காக எழுதிய கதை தான் துருவ நட்சத்திரம். கமிட் ஆகி ஒரு வாரம் ஆன பின்னரும் கதை முழுவதையும் கூறாததால் இப்படத்தில் இருந்து விலகினார் சூர்யா.
இயக்குனர் நலன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த திரைப்படத்தில், 'அஞ்சான்' படத்தின் பணிகள் காரணமாக சூர்யா விலகும் சூழல் ஏற்பட்டது.
மெட்ராஸ் படத்தின் வெற்றிக்கு பின்னர், சூர்யாவுக்கு பா.ரஞ்சித் கூறிய கதை பிடித்திருந்தும் இருவருமே அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் இன்னும் இந்த படம் உருவாகவில்லை.
சூர்யா மற்றும் ஹரி மீண்டும் இணைய இருந்த திரைப்படம் அருவா. ஆனால் இந்த படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்காத காரணத்தால் கைவிடப்பட்டது.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் சூர்யா மகதீரா திரைப்படத்தில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் சூழ்நிலை காரணமாக இருவரும் அந்த படத்தில் பணியாற்ற முடியாமல் போனது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு துவங்கிய வணங்கான் படப்பிடிப்பு, ஒரு மாதம் நடந்த நிலையில் பின்னர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் புறநானூறு. இந்த கதையை தான் சிவகார்த்திகேயனை வைத்து சுதா இயக்கி வருவதாக கூறப்படுகிறது.