cinema

தொப்பி அணிந்திருக்கும் இந்த கியூட் குழந்தை யார் தெரியுமா?

குறுகிய காலத்தில் பிரபலம்!

இந்தக் குழந்தை இன்று பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர். குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்று, பெண் ரசிகைகள் மத்தியில் அதிக பிரபலம்.

பொறியியல் பட்டம் பெற்ற நடிகர்:

இவர் மும்பையில் பயோடெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்ற நடிகர். ஆனால் நடிப்பு ஆர்வம் காரணமாக சினிமாவில் நுழைந்தார்.

13 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நடிகர்

13 ஆண்டுகளாக சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். இதுவரை 18 படங்களில் நடித்துள்ளார்.

கான்ஸ் மற்றும் குமாரை விட பெரிய நட்சத்திரமானார்

கொரோனாவுக்கு பின்னர் சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோரின் படங்கள் தோல்வியை தழுவிய போதிலும் இவரது படங்கள் பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பியது.

அனைவரையும் மிஞ்சும் இந்த நட்சத்திரம் யார்?

இந்த நட்சத்திரம் வேறு யாருமல்ல, கார்த்திக் ஆர்யன் தான். இவரது 'பூல் புலையா 3' பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போடுகிறது. 

2011 முதல் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார்

கார்த்திக் 2011 இல் 'பியார் கா பஞ்ச்னாமா' படத்தின் மூலம் அறிமுகமானார். அதே படத்தின் இரண்டாம் பாகமான 'பியார் கா பஞ்ச்னாமா 2'  இவருக்கு நிலையான வெற்றியை தேடி தந்தது.

கொரோனாவிற்குப் பிறகு கார்த்திக் கொடுத்த பிளாக்பஸ்டர்

கொரோனாவிற்குப் பிறகு பாலிவுட்டில் ஏமாற்றம் நிலவியபோது, கார்த்திக் முதல் பிளாக்பஸ்டரான 'பூல் புலையா 2' படத்தை கொடுத்தார். இது இந்தியாவில் 185.92 கோடி ரூபாய் வசூலித்தது.

100 கோடி கிளப்பில் கார்த்திக் ஆர்யன்:

கார்த்திக் ஆர்யனின் 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி', 'பூல் புலையா 2' மற்றும் 'பூல் புலையா 3' ஆகிய மூன்று படங்கள் 100 கோடி கிளப்பில் இடம்பெற்றுள்ளன. 

கார்த்திக் ஆர்யனின் வரவிருக்கும் படங்கள்

கார்த்திக் ஆர்யனின் வரவிருக்கும் படங்களில் இயக்குனர் சந்தீப் மோடியின் அடுத்த படம் மற்றும் ராஜ் சாண்டில்யாவின் அடுத்த படம் ஆகியவை அடங்கும். 

மகள் துவாவுடன் வெளியே வந்த தீபிகா படுகோன்! போட்டோஸ்

அழகில் மெழுகு சிலை; மாளவிகா மோகனன் போட்டோஸ்!

திருமணம் செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள்

ஓடிடியில் இந்த வார ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ