Tamil

70 மணி நேரம் வேலை; ஆனால் சம்பள உயர்வில்லை

Tamil

ஊழியர்களின் சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இன்ஃபோசிஸ் ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளது.

Tamil

மூன்றாம் காலாண்டில் ஊதிய உயர்வு இல்லை

இன்ஃபோசிஸ் நிறுவனம் சமீபத்தில் ஊழியர்களின் சம்பள உயர்வு திட்டத்தை ஒத்திவைத்துள்ளது. நான்காம் காலாண்டில் இதுகுறித்து முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

Tamil

கடைசி ஊதிய உயர்வு எப்போது?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடைசியாக 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. பின்பு ஓரான்டுக்கும் மேலாக ஊதிய உயர்வு இல்லை.

Tamil

என்ன காரணம்?

உலகளாவிய தேவை, நிச்சயமற்ற தன்மை மற்றும் ஐடி சேவைகளுக்கான செலவினங்களில் குறைவு காரணமாக இன்ஃபோசிஸ்  சம்பள உயர்வை ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil

70 மணி நேர வேலை

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், ஊதிய உயர்வு விஷயத்தில் அந்நிறுவனம் பின்வாங்கியுள்ளது.

Tamil

கடின உழைப்பு அவசியம்

''கடின உழைப்பு இல்லாமல் இந்தியாவை முன்னேற்ற முடியாது இளைஞர்கள் அதிகமாக உழைக்க வேண்டும்'' என்று நாராயண மூர்த்தி கூறியிருந்தார்.

Tamil

நாராயண மூர்த்தியின் கருத்துக்கு எதிர்ப்பு

நாராயண மூர்த்தியின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்தன. ஒரு சிலர் அவரது கருத்தை ஆதரித்தனர்.

Tamil

ரூ.6,506 கோடி லாபம்

இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) இன்ஃபோசிஸின் நிகர லாபம் 2.2% உயர்ந்து ரூ.6506 கோடியாக இருந்தது. ஆனால், இது எதிர்பார்ப்பை விட குறைவு என கூறப்படுகிறது. 

ஏறுமுகத்தில் பங்குசந்தை! நீண்டகால முதலீட்டிற்கு சூப்பர் சான்ஸ்!

தங்கத்தின் விலை இன்றும் குறைந்ததா.? நகைப்பிரியர்களுக்கு குஷியா.?

இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.?

2024 ஆண்டின் சாதனைகள்: UPI முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வரை!