business
Zomato பியூச்சர் அண்ட் ஆப்ஷன் பிரிவில் சேர்க்கப்படலாம் என்று நுவாமா அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் பங்குகள் உயரக்கூடும். வெள்ளிக்கிழமை பங்கு 251 ரூபாய்க்கு முடிந்தது.
ஜோமாட்டோவைப் போலவே, ஜியோ பைனான்சியலும் பியூச்சர்-ஆப்ஷனில் சேர்க்கப்படலாம். வெள்ளிக்கிழமை ஒரு பங்கு விலை 322 ரூபாய் அளவில் முடிந்தது.
செப்டம்பர் 2ஆம் தேதி கூட்டத்தில் ஈவுத்தொகை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று வேதாந்தா பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளது.
இரும்பு, எஃகு தயாரிப்பு நிறுவனமான APL அப்பல்லோ டியூப்ஸ் ஈவுத்தொகைக்கான பதிவு தேதியை செப்டம்பர் 19 என நிர்ணயித்துள்ளது. செப்டம்பர் 26 ல் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை கிடைக்கும்.
SJVN நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை மத்திய அரசு நவரத்தினா அந்தஸ்தை வழங்கியுள்ளது. திங்கள்கிழமை பங்கில் அதிரடி காணப்படலாம். வெள்ளிக்கிழமை பங்கு 133.05 ரூபாய் அளவில் முடிந்தது.
நவரத்தினா அந்தஸ்தைப் பெற்ற இரண்டாவது நிறுவனம் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். திங்கள்கிழமை பங்குகள் உயரக்கூடும். இது வெள்ளிக்கிழமை 10,688 ரூபாயாக முடிந்தது.
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நவரத்தினா பிரிவில் உள்ளது. அதன் பங்கும் திங்கள்கிழமை உயரக்கூடும், இது வெள்ளிக்கிழமை 97.15 ரூபாயாக முடிந்தது.
நவரத்தினா நிறுவனமாக இடம் பெற்றுள்ள மற்றொரு நிறுவனமான ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் பங்குகள் திங்கள்கிழமை அதிரடியாக உயரலாம். இதன் விலை 490 ரூபாயாக உள்ளது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது இடர்பாடுகளுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்பு சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.