business

அபார லாபம் தரும் 9 பங்குகள் என்னென்ன?

Image credits: iSTOCK

1. TVS எலக்ட்ரானிக்ஸ் பங்கு

டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் பங்கின் 52 வார உயர்வு ரூ.478.85. இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நிலவரப்படி இந்தப் பங்கு ரூ.452க்கு வர்த்தகமானது. நல்ல வருமானம் தரக்கூடும்.

2. டெக் மஹிந்திரா பங்கு

டெக் மஹிந்திரா பங்கின் 52 வார உயர்வு ரூ.1642.75. கடந்த ஒரு மாதத்தில் முதலீட்டாளர்களுக்கு 10% வருமானம் கிடைத்துள்ளது. இன்று காலை 11 மணி நிலவரப்படி பங்கு விலை ரூ.1,634.85. 

3. HCL டெக்னாலஜிஸ் பங்கு

எச்.சி.எல் டெக்னாலஜிஸின் 52 வார உயர்வு ரூ.1,735. கடந்த ஒரு மாதத்தில் 8% வருமானம் கிடைத்துள்ளது. இது மேலும் உயரும் என்று நம்பப்படுகிறது. 

4. குவிக் ஹீல் டெக்னாலஜிஸ்

குவிக் ஹீல் டெக்னாலஜிஸின் 52 வார உயர்வு ரூ.724.8. தற்போது ரூ.698.35க்கு வர்த்தகமாகி வருகிறது.

5. ஆரியன்ப்ரோ

ஆரியன்ப்ரோ சொலுயூசன்ஸ் பங்கின் 52 வார உயர்வு ரூ.1,950. இதன் இலக்கு விலை ரூ.1,945. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30% லாபம் எட்டியுள்ளது. 

6. ரெயின்போ சில்ரன்ஸ் மெடி

ரெயின்போ சில்ரன்ஸ் மெடிகேரின் சந்தை மூலதனம் ரூ.12,549 கோடி. சந்தை நிபுணர்கள் இந்தப் பங்கை வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். இதன் மூலம் வரும் காலங்களில் 31.9% வருமானம் கிடைக்கும்.

7. மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர்

மிட்கேப் பங்குகளான மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் சந்தை மூலதனம் ரூ.10,576 கோடி. முதலீட்டாளர்களுக்கு 20.6 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும்.

8. பாலி மெடிகூர் பங்கு

பாலி மெடிகூரின் சந்தை மூலதனம் ரூ.21,295 கோடி. இதன் மூலம் 8.4% வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர்கள் இந்தப் பங்கை வாங்குவதற்கு அறிவுறுத்துகின்றனர்.

9. விஜயா டையக்னாஸ்டிக்

விஜயா டையக்னாஸ்டிக் சென்டரை வாங்கவும் அறிவுறுத்தப்படுகிறது. பங்கு 7.6 சதவீத வருமானம் தரக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.9,426 கோடி.

குறிப்பு

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஆபத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

Find Next One