business
தனது 35 வயதில் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவராகி உள்ளார். கிரேக் பார்க்லேவின் இடத்தை இவர் நிரப்புவார்.
ஊடக செய்திகளின்படி, ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு ரூ.124 கோடி. தனது வர்த்தகத்தின் மூலம் கோடிகளை சம்பாதித்துள்ளார்.
ஜெய் ஷாவின் தந்தையும் மத்திய அமைச்சருமான அமித் ஷா மற்றும் அவரது மனைவி ரூ.65.67 கோடி சொத்து வைத்துள்ளனர். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்துப் பட்டியலில் ஜெய் ஷா முதல் இடத்தில் உள்ளார். அமித் ஷாவை விட ஜெய் ஷாவிடம் இரண்டு மடங்கு சொத்துக்கள் உள்ளன. அவரது தந்தையை விட 65 கோடி ரூபாய் அதிகம்.
ICC தலைவர் பதவியை இதற்கு முன்பு சரத் பவார், ஜக்மோகன் டால்மியா, சசாங்க் மனோகர், என்.சீனிவாசன் ஆகியோர் வகித்துள்ளனர். இந்தப் பதவியில் அமரும் 5வது இந்தியர் ஜெய் ஷா.
ஜெய் ஷா குஜராத்தில் கல்வியை முடித்தவர். பி.டெக் பட்டம் பெற்ற இவர் கல்லூரி தோழியான ரிஷிதா படேலை காதல் திருமணம் செய்து கொண்டார்.