Asianet News TamilAsianet News Tamil

பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் தனியார் விற்பனையாளர்கள்; மதுரையில் உருவான புதிய சிக்கல்!!

மதுரையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாததால் ஆவினுக்கு பால் வழங்க தனியார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு பால் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து மதுரை ஆவின் பால் கொள்முதல் செய்து பாக்கெட் பால் பதப்படுத்தப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மதுரையில் 40 வழித் தடங்களில் 390 பால் டெப்போக்கள் மூலமாக பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டருக்கு அதிகமான பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. 

இது, தற்போது பால் கொள்முதல் 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்வது குறைந்துள்ளது. இதனால், மதுரையில் பால் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்டது. காலை 4 மணிக்கு விநியோகம் செய்ய வேண்டிய பால் 3 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கு மேல் விநியோகம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க..கோவை தெற்கில் கமல்ஹாசனை தோற்கடித்து மாஸ் காட்டியவர் வானதி சீனிவாசன்.. பாஜக Vs மநீம மோதல் !

பால் காலதாமதமாக வினியோகம் செய்யப்பட்டதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். கொள்முதல் விலையை உயர்த்தி தர பால் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கொள்முதல் விலை உயர்த்தப்படாததால், உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பால் விற்பனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.  

ஆவின் பால் நிலையங்களில் வழக்கமாக காலை 4 மணிக்கு ஏஜென்டுகள் பால் கொள்முதல் செய்துவிடுவார்கள். தற்போது, 7 மணிக்கு தாமதமாக பால் கொள்முதல் செய்வதால், பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியாமல் கெட்டுப் போகும் சூழல் ஏற்படுகிறது. எனவே வழக்கம்போல 4 மணிக்கு  பால் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்த ஏஜென்டுகள் அங்கு வந்த கண்காணிப்பாளிடம் அதிக விலை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆவின் நிலையத்துக்கு வந்து பேசுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஏஜென்டுகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க..பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

Video Top Stories