காலநிலை மாற்றத்தால் 50,000 ஆண்டுகளுக்கு பிறகு ஜோம்பி வைரஸ்கள் மீண்டும் எழக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
ரஷ்யாவில் கொசுக்கள் நிறைந்த, சேற்றுப் படர்ந்த கொலிமா ஆற்றின் கரையில் ஒரு பதினைந்து நாட்கள் வேலை ஒன்றுக்காக முகாமிட்டிருப்பதை கண்டிப்பாக எவருமே ரசிக்க மாட்டார்கள். ஆனால், அத்தகைய தியாகத்தை செய்த வைராலஜிஸ்ட் ஜீன் மைக்கேல் கிளவேரி, ஜோம்பி வைரஸ்கள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்.
காலநிலை மாற்றம் பொது சுகாதாரத்திற்கு ஏற்படுத்தும் மற்றொரு ஆபத்தாக இந்த வைரஸ்கல் பார்க்கப்படுகின்றன. 73 வயதான ஜீன் மைக்கேல் கிளவேரியின் கண்டுபிடிப்புகள் புவி வெப்பமடைதல் பற்றிய ஒரு பயங்கரமான யதார்த்தை வெளி உலகிற்கு எடுத்துச் சொல்லியுள்ளது.
undefined
சைபீரிய பெர்மாஃப்ரோஸ்ட் (நிரந்தர உறைந்த பனி நிலம்) அடுக்குகளுக்குள் ஆழமாக காணப்படும், அண்மையில் கண்டறியப்பட்ட கிட்டத்தட்ட 50,000 ஆண்டுகள் பழமையான வைரஸ்கள் உட்பட, பெரிய வைரஸ்களைப் பற்றி சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளவேரி ஆய்வு செய்து வருகிறார்.
இந்த கிரகம் ஏற்கனவே தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பமாக இருப்பதால், 2030ஆம் ஆண்டில் கோடை காலத்த்டில் ஆர்க்டிக் பனி இல்லாததாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வெப்பமான காலநிலை மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடும் என்ற கவலைகள் எழுப்பப்படுகின்றன.
ஆனால் செயலிழந்து போன நோய்க்கிருமிகள் குறைவாகவே ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு, கிளாவரியின் குழு சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டிலிருந்து சுமார் 50,000 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ்களை பிரித்தெடுத்தனர். அவை அனைத்துமே தொற்றுநோய்களை ஏற்படுத்துபவை.
வெப்பமான வெப்பமண்டல பகுதிகளில் இருந்து பரவும் vector borne diseasesஐக் குறிப்பிட்டு, காலநிலை மாற்றத்துடன், தெற்கிலிருந்து வரும் ஆபத்துகளைப் பற்றி சிந்திக்கப் பழகிவிட்டோம். ஆனால், பெர்மாஃப்ரோஸ்ட் கரைந்து நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை விடுவிப்பதால் வடக்கில் இருந்து ஏதேனும் ஆபத்து வரக்கூடும் என பிரான்சின் Aix-Marseille பல்கலைக்கழகத்தின் பேராசியராக பணியாற்றி வரும் ஜீன் மைக்கேல் கிளவேரி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு கோடை காலத்தில் சைபீரியாவில் ஏற்பட்ட வெப்ப அலையானது ஆந்த்ராக்ஸ் வித்துகளை செயல்படுத்தி, டஜன் கணக்கான நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுத்தது. கிரிப்டோபயோசிஸ் எனப்படும் செயலற்ற வளர்சிதை மாற்ற நிலையில் பலசெல்லுலார் உயிரினங்கள் கூட நிரந்தர உறைபனி நிலைகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதைக் காட்டும் கண்டுபிடிப்புகளை இந்த ஆண்டு ஜூலையில் விஞ்ஞானிகள் குழு ஒன்று வெளியிட்டது. சைபீரியன் பெர்மாஃப்ரோஸ்டிலிருந்து கண்டறியப்பட்ட 46,000 ஆண்டுகள் பழமையான வட்டப்புழுவை மீண்டும் நீரேற்றம் செய்ததன் மூலம் வெற்றிகரமாக அதனை உயிர்ப்பித்தனர்.
பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதல்: இஸ்ரேல் கொண்டாடும் 25 வயதுப் பெண்!
ஆய்வில் ஈடுபட்டுள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாலிகுலர் செல் பயாலஜி அண்ட் ஜெனெடிக்ஸ் பேராசிரியர் டெய்முராஸ் குர்சாலியா கூறுகையில், “வாழ்க்கையை நிறுத்திவிட்டு, அதை மறுதொடக்கம் செய்யலாம் என்பது அடிப்படையானது.” என்றார். அதாவது, வளர்சிதை மாற்ற செயல்முறைகளை குறைப்பது அல்லது இடைநிறுத்துவது சில உயிரினங்களுக்கு இயல்பானது என்கிறார் அவர்.
மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அல்லது மருந்து சிகிச்சைகள் இல்லாத தொற்று நோய்களை பல ஆண்டுகளாகவே உலக சுகாதார நிறுவனங்களும் அரசாங்கங்களும் கவனித்து வருகின்றன. 2017 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம், நோய்க்கிருமிகளின் பட்டியலில் நோய் ‘X’-ஐச் சேர்த்தது. இது, தொற்றுநோயைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டது. கொரோனாவுக்கு பிறகு, இது இன்னும் தீவிரம் பெற்றுள்ளது.
“உலக சுகாதார நிறுவனம் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுடன் இணைந்து அனைத்து வைரஸ் குடும்பங்கள், தொற்றுநோய்கள், தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் பற்றிய ஆதாரங்களை பார்த்து வருகிறது. அவை பெர்மாஃப்ரோஸ்ட் கரைவதன் மூலம் வெளியிடப்படலாம்.” என உலக சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் டாக்டர் மார்கரெட் ஹாரிஸ் கூறியுள்ளார்.
அதாவது, பருவநிலை மாற்றம் உறைந்து கிடக்கும் நோய்க்கிருமிகளை மீண்டும் உயிர்ப்பிக்கும். அதன் மூலம் பெரிய ஆபத்துகள் வரக்கூடும் என எச்சரிக்கை மணி அடிக்கப்படுகிறது.