ஏழைநாடுகளைக் கூடவா இப்படி ஏமாற்றும் இந்த சீனா..!! எதுக்கு இந்த வெட்டி பந்தா, கண்ணீர் வடிக்கும் ஆப்ரிக்க நாடு

By Ezhilarasan Babu  |  First Published Apr 28, 2020, 5:50 PM IST

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள  ஜிம்பாப்வே நாட்டிற்கான  சீனத் தூதரகத்தின் ஆலோசகரான ஜாவோ போகாங், சீனாவில் இருந்து  மருத்துவ குழு எப்போது ஜிம்பாப்வேக்கு வரும் என்பது தெரியவில்லை . 
 


சீனா அனுப்புவதாக கூறிய மருத்துவ குழுவை எதிர்பார்த்து  ஜிம்பாப்வே நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர் .  சீன மருத்துவர்களுக்கான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை ஆனால் சீன மருத்துவர்கள் வருவார்கள் என்பதை  நாங்களும் எதிர்பார்க்கிறோம் என ஜிம்பாப்வே நாட்டுக்கான சீன  தூதரகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார் .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இதுவரை உலகம் முழுக்கும் 30 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . இந்த வைரசால் அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . 

Latest Videos

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில்,  ஆப்பிரிக்க நாடுகளிலும் தற்போது கொரோனா  வேகமெடுக்க தொடங்கியுள்ளது ,  அதன் தாக்கம் தென்னாபிரிக்கா ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் மிக மோசமாக உள்ளது .  அங்கே வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை விட அங்கு கடைப்பிடிக்கப்பட்டு ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . சுமார்  80 சதவீதத்துக்கும் அதிகமானோர் நடுத்தர ஏழை எளிய மக்கள் என்பதால் அவர்கள் மற்றிலுமாக  தங்கள் வாழ்வாதாரத்தை  இழந்து தவித்து வருகின்றனர்.   மூன்று வேளை உணவு என்பது அங்கு  பெரும் கனவாகவே மாறியுள்ளது , முழு ஊரடங்கு என்பதில் , மின்சாரம் குடிநீர் போன்றவற்றின் விநியோகமும்  அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அந்நாட்டு மக்கள் சொல்லெனாத் துயரத்திற்கு ஆளாகி உள்ள நிலையில் ,  தற்போது வளர்ந்த நாடுகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர் உலகச் சுகாதார நிறுவனம் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான மருத்துவ உதவிகளை செய்ய முன்வந்துள்ள நிலையில் ,  சீனாவும் தன்பங்குக்கு ,  ஜிம்பாப்வே  நாட்டிற்கு சீனா மருத்துவ  நிபுணர் குழுவை அனுப்பி வைக்கும்  என அறிவித்துள்ளது .  ஆனால் இதுவரையில் சீனா அறிவித்தபடி ஜிம்பாப்வே நாட்டுக்கு சீனா மருத்துவ குழு வந்து சேரவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள  ஜிம்பாப்வே நாட்டிற்கான  சீனத் தூதரகத்தின் ஆலோசகரான ஜாவோ போகாங், சீனாவில் இருந்து  மருத்துவ குழு எப்போது ஜிம்பாப்வேக்கு வரும் என்பது தெரியவில்லை . 

 

அதன் வருகைக்கான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை,  ஆனால் விரைவில் அந்த குழு  வரும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர் ,  இந்த வைரஸை கட்டுப்படுத்த ஜிம்பாப்வே மிகவும் கடினமாக உழைத்து வருகிறது ,  சீனா தன்னுடைய அனுபவத்தை ஜிம்பாப்வே உடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது என அவர் தெரிவித்துள்ளார் . ஆனால்  குறைந்த மக்கள் தொகை கொண்ட கியூபா மிகப்பெரும் வளர்ந்த நாடுகளுக்குக்கூட தங்களது நாட்டின் மருத்துவ குழுக்களை அனுப்பி மனிதநேயத்துடன் சேவையாற்றி வரும் நிலையில் மிக வளர்ந்த நாடான சீனா,  மிகச் சிறிய ஒரு ஏழை நாட்டிற்கு மருத்துவ குழுவை அனுப்புவதாக  கூறிவிட்டு இதுவரை அது தொடர்பான எந்த தகவலையும் தெரிவிக்காமல் இருப்பது  ஜிம்பாப்வே மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .
 

click me!