ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து... உடல் கருகி 42 பேர் உயிரிழப்பு!

By vinoth kumar  |  First Published Nov 17, 2018, 11:09 AM IST

ஜிம்பாப்வேயில் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 42 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 24-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வேயில் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 42 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 24-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்குட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி சுமார் 70-க்கும் மேற்பட்டோர்  பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

Latest Videos

புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு சென்றபோது அந்த பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. ஓடும் பேருந்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 24-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.  

கடந்த வாரம் தலைநகர் ஹராரேக்கு அருகே கடந்த வாரம் பேருந்து விபத்தில் 47 பேர் உயிரிழந்த, நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.

click me!