உலகின் டாப் 100 நகரங்கள் பட்டியல், இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே ஒரு நகரம், எது தெரியுமா..??

By Ezhilarasan Babu  |  First Published Nov 24, 2019, 3:53 PM IST

அதில் சர்வதேச அளவில்  இந்தியாவின் பெங்களூரு  83 வது இடத்தை பிடித்துள்ளது .  முதலாவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் இடம்பெற்றுள்ளது.  அதேசமயம் இந்த லிஸ்டில் டெல்லிக்கு 101 ஆவது இடமும்,  மும்பை 107 வது இடமும் கிடைத்துள்ளது. முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே இந்திய நகரம் என்ற பெருமையை பெங்களூர் பெற்றுள்ளது . 


தனிமனித வளர்ச்சி வீட்டு வசதி,  கல்வி ,  சுகாதாரம் ,  உள்ளிட்ட தரத்தின் அடிப்படையில் உலகில் தேர்வு செய்யப்பட்ட 100 நகரங்களின் இந்தியாவிலிருந்து ஒரே ஒரு நகரம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது .  அந்த நகரம் பெங்களூரு எனவும் உலகத் தரவரிசையில் 83 வது இடத்தை அது பிடித்துள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Latest Videos

உலகின் பல்வேறு விஷயங்களில் தலைசிறந்த நகரங்களை தேர்வு செய்து அது குறித்து பட்டியலிடப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில்  உலகம் முழுவதும் இருக்கும் நகரங்களில் சமூக மற்றும் பொருளாதார வளம் கொண்ட டாப் 100  நகரங்களை தேர்வு செய்யும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று இறங்கியது அது நடத்திய ஆய்வின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெறுமனே நகரத்தின் பொருளாதாரத்தை மட்டும் கணக்கிட்டு எடுத்துக்கொண்ட பணக்கார நகரங்களின் பட்டியலாக  இது தயாரிக்கப்படவில்லை. அதாவது உலகம் முழுவதும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, அந்தந்த  நகரின் மக்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை வளர்ச்சி, மற்றும்  நகரில் தரம்,  இயற்கை வளம் ஆகியவற்றை கணக்கிடப்பட்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. என அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் சர்வதேச அளவில்  இந்தியாவின் பெங்களூரு  83 வது இடத்தை பிடித்துள்ளது .  முதலாவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் இடம்பெற்றுள்ளது.  அதேசமயம் இந்த லிஸ்டில் டெல்லிக்கு 101 ஆவது இடமும்,  மும்பை 107 வது இடமும் கிடைத்துள்ளது. முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே இந்திய நகரம் என்ற பெருமையை பெங்களூர் பெற்றுள்ளது . அதாவது பெங்களூரு நகரின் தனி நபர் வளர்ச்சி மட்டுமல்லாமல் வீட்டு வசதி,  கல்வி,  சுகாதார வசதி,  போன்றவைகளிலும் மற்ற இந்திய நகரங்களை விட பெங்களூரு முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் இருக்கும் டாப் 100 நகரங்களில் ஒரே ஒரு இந்திய நகரம் கர்நாடக மாநிலம் பெங்களூரு இடம்பிடித்துள்ளது என்பது குறிப்படதக்கது.

click me!