அதாவது பிரசாந்த் தனக்கு ஆன்லைன் மூலம் பழக்கம் ஏற்பட்ட காதலியை சந்திக்க சுவிட்சர்லாந்து செல்ல விரும்பினார். ஆன்லைன் காதலி ஸ்வப்னிகாவை சந்திக்க கூகுள் மேப் உதவியுடன் சுவிட்சர்லாந்து செல்ல விரும்பினார், ஆனால் நடுவில் அவர் பாகிஸ்தானில் கடக்கும்போது எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கூகுள் மேப் உதவியுடன் காதலியைத் தேடிச் சென்ற ஆந்திர இளைஞரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் சோலிஸ்தானில் சட்டவிரோதமாக நுழைந்ததாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் பிரசாந்த் வைந்தம். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 14-ஆம் தேதி அவர் பாகிஸ்தானின் பாகல்பூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள பாலைவனத்தில் பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி உடைந்ததால் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்திருப்பதாக ஊடகங்கள் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது பிரசாந்த் தனக்கு ஆன்லைன் மூலம் பழக்கம் ஏற்பட்ட காதலியை சந்திக்க சுவிட்சர்லாந்து செல்ல விரும்பினார். ஆன்லைன் காதலி ஸ்வப்னிகாவை சந்திக்க கூகுள் மேப் உதவியுடன் சுவிட்சர்லாந்து செல்ல விரும்பினார், ஆனால் நடுவில் அவர் பாகிஸ்தானில் கடக்கும்போது எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது தெரியவந்துள்ளது.
பிரசாந்த் தனது பெற்றோர்களுக்காக பேசி வெளியிட்ட வீடியோ ஒன்று திங்கட்கிழமை பிற்பகல் முதல் வைரலாகி வருகிறது. அதில் தெலுங்கில் பேசும் பிரசாத் ஒரு மாதத்திற்குள் பகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவேன் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். பிரசாந்த் ஆன்லைன் காதலியை பார்க்க சுவிட்சர்லாந்து செல்ல விரும்பினார் ஆனால் பாகிஸ்தானுக்கு எப்படி சென்றார் என்பதை கண்டுபிடித்த போலீஸார் முயன்று வருகின்றனர்.