15 மனைவிகளுடன் உல்லாசம்..!! 175 கோடியில் விதவிதமாக கார்களை வாங்கி கொடுத்து சல்லாபம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Nov 21, 2019, 4:23 PM IST

விதவிதமாக சமைத்துக் கொடுக்க நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்கள் என குடும்பத்துடன் குதுகளித்து வருகிறார் மன்னர் என்கின்றனர். உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் நிலையில் தன்னுடைய 15 மனைவிகளுக்காக சுமார் 175 கோடி ரூபாய் செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை  வாங்கியுள்ள அவர்.  ஒவ்வொரு மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த கார்களில் மாற்றம் செய்துள்ளாராம்.


நாட்டு மக்கள் வறுமையில்  வாடும் நிலையில் தன்னுடைய 15 மனைவிகளுக்காக சுமார் 175 கோடி ரூபாயில் அதிநவீன சொகுசு கார்களை ஆப்ரிக்க மன்னர் இறக்குமதி செய்திருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாட்டு மக்களின் தேவை எனன என்று குறிப்பறிந்து செய்யும் மன்னன் தெய்வத்திற்கு இணையானவன்  என உலகப் பொதுமறை வள்ளுவம் சொல்கிறது.  ஆனால் தன் நாட்டு மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருக்கும் போது  அவர்களை இன்னலில் இருந்து  மீட்க முயலாமல், தானும் தன் குடும்பத்தாரும் சொகுசாக வாழ பாடுபடும் மன்னர் என்ற அவப் பெயருக்கு ஆளாகியிருக்கிறார் தென் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எஸ்வாத்தினி நாட்டு மன்னர். 

Latest Videos

ஆடம்பர பேர்வழி என பெயர் வாங்கிய எஸ்வாத்தினி மன்னருக்கு விதவிதமாக 15 மனைவிகள் உள்ளனராம்.  அவர்களுக்கு மொத்தம்  23 பிள்ளைகள் உள்ளனர்.  இவர் குடும்பத்தின் நலனே நாட்டின் நலன் என ஆடம்பரத்தில் திலைத்துவருகிறார் என நாட்டு மக்கள் குமுறி வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு மனைவிக்கும் தனி பங்களா அவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுத் திடல் நீச்சல் குளம், விதவிதமாக சமைத்துக் கொடுக்க நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்கள் என குடும்பத்துடன் குதுகளித்து வருகிறார் மன்னர் என்கின்றனர்.  உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் நிலையில் தன்னுடைய 15 மனைவிகளுக்காக சுமார் 175 கோடி ரூபாய் செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை  வாங்கியுள்ள அவர்.  ஒவ்வொரு மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த கார்களில் மாற்றம் செய்துள்ளாராம். 

மன்னர் தன்னுடைய பயன்பாட்டுக்காக மேலும் பிரத்தியேகமாக கூடுதலாக சொகுசு  வசதிகள் கொண்ட கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.  இதுதவிர அவருடைய  23 பிள்ளைகள் மற்றும் அரச குடும்பத்தினர் பயன்படுத்துவதற்காக  டசன்டசன்களாக பிஎம்டபிள்யூ கார்களை ஆர்டர் செய்துள்ளார்.  ஏற்கனவே இவரிடம்  20 மெர்சிடஸ் மே பேச்,  புல்மேன்,  பிஎம்டபிள்யூ,  எக்ஸ்6 என்ற பல சொகுசு கார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. எஸ்வாத்தினி மிகவும் செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தாலும்,  அந்நாட்டு மக்கள் உணவு , வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில்வாடி வருகின்றனர்.  இந்நிலையில் மன்னரின் சல்லாபத்திற்கான பலதாரதிருமணம்,  வரம்பு மீறிய ஆடம்பர வாழ்க்கை மக்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்திற்காக இறக்குமதி  செய்துள்ள கார்களின் விலை மற்றும் அதன் டிசைன்களை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அந்த கார்களை புகைப்படம் எடுக்க மன்னர் தடை விதித்துள்ளாராம். 
 

click me!