இன்று செவிலியர் தினம்: மே 12இல் வேற என்ன ஸ்பெஷல்?

Published : May 12, 2025, 01:30 PM ISTUpdated : May 12, 2025, 01:31 PM IST
International Nurses Day

சுருக்கம்

மே 12ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம், மெலனோமா தினம் போன்ற முக்கிய நிகழ்வுகள் கொண்டாடப்படுகிறது. வேறு என்ன ஸ்பெஷல் என்று இங்கு பார்க்கலாம்.

இன்று மே 12 ஆம் தேதி திங்கள் கிழமை. இந்நாளில் வரும் முக்கிய நிகழ்வுகளை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

1. உலக செவிலியர் தினம் (World Nurses Day):

1820ஆம் ஆண்டு நவீன செவிலியத்தின் நிறுவனர் என்று கருதப்படும் ஆங்கிலேயர் செவிலியரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கல் மே 12ஆம் தேதி அன்று தான் பிறந்தார். இவர் கிரிமியன் போரின் போது காயமடைந்த வீரர்களுக்கு முதல் பராமரிப்பு முறையை ஏற்பாடு செய்தார். இதனால் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது. அவரது செயல்பாடு தொழில்முறை செவிலியர் கல்வி மற்றும் மருத்துவ நெறிமுறைகளின் தரநிலைகளை தொடங்கியது. எனவே 1974 முதல் சர்வதேச செவிலியர்கள் கவுன்சில் (International Council of Nurses) நவீன உலகில் செவிலியர்களின் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நைட்டிங்கல் பிறந்த மே 12 ஆம் தேதியை செவிலியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடிவருகிறது.

2. வெசாக் தினம் (Vesak Day)

ஒவ்வொரு மே 12ஆம் தேதியும் வெசாக் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பெளத்தர்களுக்கு மிக முக்கியமான நாளாகும். இது புத்தரின் பிறந்த நாள் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்நாளை பௌத்தர்கள் மனித குலத்தின் பழமையான ஆன்மீக போதனைகளில் ஒன்றின் நினைவரான கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பை நினைவு கூறுகிறார்கள். இலங்கை, தாய்லாந்து, மியான்மர், வியட்நாம், கம்போடியா போன்ற பல ஆசிய நாடுகளில் இந்த தினத்தை கொண்டாடுவதால், பொது விடுமுறையாக உள்ளது. வீடுகளில் விளக்கேற்றியும், தொண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும், தேவைப்படுபவர்களுக்கு உணவு விநியோகம் செய்தும் இந்த தினத்தை கொண்டாடுவார்கள். இந்நாளில் இறைச்சி, மது அருந்துவதை தவிர்க்கின்றனர்.

3. சர்வதேச நாள்பட்ட சோர்வு நோய்க்குறி விழிப்புணர்வு தினம் (World Chronic Fatigue Syndrome Day)

மே 12ஆம் தேதி சர்வதேச நாள்பட்ட சோர்வு நொய்புரி விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது இந்த நாள் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி (Chronic Fatigue Syndrome) எனப்படும் ஒரு நோயின் மூலம் பாதிக்கப்பட்டு வரும் கவனத்தில் ஈர்க்கும் நோக்கில் கொண்டாடப்படுகிறது. இந்நோய் 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் ஒரு வகை சோர்வு அறிகுறியாகும். இது தினசரி வேலைகளை செய்யவோ அல்லது படுக்கையில் இருந்து எழுவதற்கு கூட ஒருவரை தடுக்கலாம். இது தலைவலி, மூட்டு வலி, தசைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். 30 வயதிற்கு பிறகு இது இளம் பருவத்தினர் மற்றும் வயதானவர்களிடம் ஏற்படுகிறது. குறிப்பாக, ஆண்களை விட பெண்கள் தான் 2-3 மடங்கு அதிகமாக இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

4. உலக மெலனோமா தினம் (World Melanoma Day)

ஒவ்வொரு மே மாதத்தின் 2வது திங்கள் கிழமை அன்றுதான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த 2025 ஆம் ஆண்டு உலக மெலனோமா தினம் மே 12 ஆகும். இது மிகவும் தீவிரமான தோல் புற்றுநோய் வகைகளில் ஒன்றான வீரியமிக்க மெலனோமாவின் மீது கவனம் செலுத்த தூண்டும் வருடாந்திர முயற்சியாகும். மெலனோமாவின் ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து மற்றும் தடுப்பதின் முக்கியத்துவத்தை குறித்து மக்களுக்கு நினைவூட்டுவதற்காக தான் இந்நாள் கொண்டாடப்படுகிறது இந்நோய் இளைஞர்களிடையே அதிகம் காணப்படுகின்றன என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்திலேயே இதை கண்டறிவதன் மூலம், குணமடைவதற்கான வாய்ப்புகள் கணிச்சமாக அதிகரிக்கிறது. எனவே இந்நாளில் இலவச நிறமி புள்ளி சோதனைகள் ஆபத்து காரணிகள் குறித்த தகவல்கள் பிரசாரங்கள் மற்றும் தோல் பாதுகாப்பு முறைகள் குறித்த நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
நண்பேன்டா.. ரஷ்ய அதிபர் புடினை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!