விற்பனைக்கு வருகிறது உலகின் மிக விலை உயர்ந்த வீடு! எங்க இருக்கு தெரியுமா?

By SG Balan  |  First Published Apr 20, 2024, 11:14 PM IST

100 அறைகள் கொண்ட இந்த வீட்டில் மூன்று லிஃப்ட்கள், ஐந்து சலூன்கள், 17 படுக்கையறைகள் ஆகியவற்றுடன் அதிநவீன சமையலறையும் உள்ளது. இந்த வீடு அமைந்துள்ள எஸ்டேட்டில் 50 குதிரைகளுக்கான இடம், 36 பூங்காக்கள் எனப் பல வசதிகள் உள்ளன.


உலகின் மிக விலையுயர்ந்த வீடு என்று பெயர் பெற்ற வீடு ஒன்று தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் Seine-et-Marne என்ற இடத்தில் உள்ள அந்த பிரமாண்ட வீடு Chateau d'Armainevilliers என்று அழைக்கப்படுகிறது.

100 அறைகள் கொண்ட இந்த வீட்டில் மூன்று லிஃப்ட்கள், ஐந்து சலூன்கள், 17 படுக்கையறைகள் ஆகியவற்றுடன் அதிநவீன சமையலறையும் உள்ளது. இந்த வீடு அமைந்துள்ள எஸ்டேட்டில் 50 குதிரைகளுக்கான இடம், 36 பூங்காக்கள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் எனப் பல வசதிகள் உள்ளன.

Latest Videos

undefined

இப்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த வீட்டின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. 425 மில்லியன் யூரோ விலையில் விற்பனைக்கு இருக்கிறது.

மேன்ஷன் குளோபல் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த வீடு ஒரு காலத்தில் ரோத்ஸ்சைல்ட் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உரியதாக இருந்தது. பிறகு மொராக்கோ மன்னருக்கு சொந்தமானதாக மாறியது.

ஈபிள் கோபுரத்தில் இருந்து கிழக்கே 30 மைல் தொலைவில் இந்த மாபெரும் வீடு அமைந்துள்ளது. இந்த Chateau d'Armainevilliers பங்களா நீண்ட நெடிய வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.

இந்த கோட்டை வீடு 1100-களில் கட்டப்பட்டது. பிரெஞ்சு புரட்சி காலத்தில் இந்த வீட்டின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது. அதற்குப் பிறகு Rochefoucauld Doudouville குடும்பம் இந்தக் கோட்டையை புதுப்பித்தது. அவர்கள்தான் 1980-களில் மொராக்கோ மன்னர் இரண்டாம் ஹாசனுக்கு விற்றனர்.

மன்னர் இரண்டாம் ஹாசன் 1999ஆம் ஆண்டு இறந்தார். அவருக்குப் பிறகு, 2008ஆம் ஆண்டில் அவரது மகன் இந்த கோட்டை வீட்டை கையகப்படுத்தி 200 மில்லியன் டாலருக்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுள்ளார். அவரிடம் இருந்து வீட்டை வாங்கியவர் யார் என்ற விவரம் வெளிவரவில்லை.

click me!