உலகின் மிக நீண்ட பாலம் இன்று திறப்பு !! சீனா – ஹாங்காங்கை இணைக்கும் கடல் பாலம்…

By Selvanayagam PFirst Published Oct 23, 2018, 7:15 AM IST
Highlights

சீனாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கடல் வழியாக செல்லும் வகையில் மிக நீண்ட கடல் பாலம் இன்று திறக்கப்படுகிறது. சீனாவின் ஜுஹாய் மேகோவிலிருந்து ஹாங்காங் வரை 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டி முடிக்கப்பட்ட மிகப்பெரிய கடல் பாலம் பியர்ல் ஆறு கடலில் கலக்கும் தெற்கு சீன கடல் பகுதியில் அமைந்துள்ளது

 உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்தின் உதவியால் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெக்காவ் மற்றும் தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங் பகுதிகளை சீனாவின் சுகாய் நகருடன் இணைக்கும் வகையில் தென்சீனக்கடலில் 55 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது.

சுமார் 1.40 லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலப்பணிகள் 2016-ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்ட நிலையில், அதன் திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப்போனது. நீண்ட நாள் தாமதத்துக்குப்பின் அந்த பாலம் இன்று  திறக்கப்படுகிறது. இதற்காக சுகாய் நகரில் நடைபெறும் விழாவில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ஹாங்காங், மெக்காவ் பகுதிகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இந்த பாலத்தில் நாளை முதல் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

உலகின் மிக நீள கடற்பாலமாக கருதப்படும் இந்த பாலம் தென்சீனக்கடலில் சுமார் 56,500 சதுர கி.மீ. பகுதியையும், அதை சூழ்ந்துள்ள 11 நகரங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. தென்சீனக்கடலை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் இந்த பாலத்தை கட்டியுள்ளது.

இந்த பாலத்தால் மேற்படி நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 3 மணியில் இருந்து வெறும் 30 நிமிடங்களாக குறையும். இந்த பாலத்துக்கு மிகுந்த வரவேற்பு இருந்தாலும், ஹாங்காங் மக்களிடம் அதிருப்தி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

click me!