சரியான பாதையில் இந்தியா..!! உலக சுகாதார நிறுவனம் மனமுவர்ந்து பாராட்டு ..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 2, 2020, 7:01 PM IST
Highlights

அதே நேரத்தில் அதிக ஏழை எளிய மக்கள் கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் அதிக அளவில் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் பாதிக்கக்  கூடும்,

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில் ஏழை எளிய  மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்திய பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்  டெட் ரோஸ் அதானம் பாராட்டு தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே இந்தியா ஊரடங்கு உத்தரவு அறிவித்தபோது இந்தியாவுக்கு அவர் பாராட்டு தெரிவித்திருந்தனர் .  தற்போது இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் வரவேற்றுள்ளார் .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் உலகமு அளவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது.   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆயிரத்தை கடந்துள்ளது.  

இந்ந வைரசிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல்  உலகமே போராடி வருகிறது .  இந்த வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி  சமூக விலகல்  மற்றும் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளுதல் மட்டுமே ஒரே வழி என அறிந்துள்ள  நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடை பிடித்து வருகின்றன.  இவ்வுலகில்  தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி , இந்நிலையில் இதை வரவேற்றுள்ள  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ்  அதனாம்,  அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது என பாராட்டியுள்ளார் .  அதே நேரத்தில் அதிக ஏழை எளிய மக்கள் கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் அதிக அளவில் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் பாதிக்கக்  கூடும், 

எனவே அவர்களுக்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு கிடைக்க அரசு வழி வகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள அவர் ,  கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது மட்டுமல்லாமல் கொரோனாவை எதிர்க்கவும் மக்களுக்கு உதவவும்  சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயை நிதியாக அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது என அவர் பாராட்டியுள்ளார் . எல்லா நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்  அதை  கட்டுப்படுத்த இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் வரவேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது . 

 

 

click me!