சீனாவில் கொரோனா வைரஸ் சீசன் 2 தீவிரம்... எந்த அறிகுறிகள் இல்லாத 1,541 பேருக்கு நோய்தொற்றால் பீதி..!

By vinoth kumarFirst Published Apr 2, 2020, 7:00 PM IST
Highlights

கொரோனா வைரஸ் அறிகுறியற்ற 1,541 நோயாளிகள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேருக்கு புதிய பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் 43 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது.  ஆனால், அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. 

கொரோனாவால் மரண பீதியில் உலகமே ஆடிப் போய்க் கிடக்கும் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் சீசன் 2 தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 1,541 பேருக்கு என்ன நோய் தொற்று என்று தெரியாததால் மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்துபோயியுள்ளனர். 

சீனாவில் ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வூஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்ததால், மக்கள் வெளியே அனுமதிக்கும் வகையில் ஊரடங்கு தளர்த்தப் பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாத வகையில் 1,541 பேர் மர்மமான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்படுத்திய நாட்டில் மீண்டும் இரண்டாவது அலை வைரஸ் நோய் தொற்று ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் ஆணையம் கூறுகையில்  கொரோனா வைரஸ் அறிகுறியற்ற 1,541 நோயாளிகள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேருக்கு புதிய பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் 43 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது.  ஆனால், அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. கொரோனா அறிகுறியற்ற நபர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் 14 நாட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறைந்து விட்டாலும், அறிகுறியற்ற நபர்கள் குறித்த கூடுதல் தகவல் வெளியிடுவதற்கும் அவர்கள் மீது கட்டுப்பாட்டை கடுமையாக்குவதற்கும் சீன அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே,  கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்த நிலையில் உள்ள நபர்களிடமிருந்து உயிருள்ள கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக சீன மருத்துவர் தெரிவித்துள்ளார். அதனால், அறிகுறி இல்லாத ஆனால் உயிருடன் வாழும் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் புள்ளிவிவரங்கள் சீன அரசு தயாரித்து வருகிறது. இந்த புதிய தகவல்களை வைரஸ் பரவுவதை இரண்டாவது அலை என்று பகுப்பாய்வு குழு தெரிவிக்கிறது இதனால் சீன மக்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர்.

click me!