உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது...!! எண்ணிக்கை மேலும் உயரும் என அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 11, 2020, 3:15 PM IST
Highlights

8 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது .  ஏற்கனவே பலி எண்ணிக்கையில் முன்னணியில்  உள்ள இத்தாலியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 549 ஆக உள்ளது ,  மூன்றாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 81 ஆக உள்ளது . 

உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2,000 ஆக அதிகரித்துள்ளது . இந்த பலி எண்ணிக்கை  ஒட்டு மொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதுமட்டுமின்றி இத்தாலியும் அமெரிக்காவும் பலி எண்ணிக்கை பட்டியலில் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன, இந்த வைரசின் கொடூரம் எதுவரை நீடிக்கும் என்பது தெரியாமல்  ஒட்டு மொத்த உலகமும் இந்த வைரசை எதிர்த்து போராடிக்க கொண்டிருக்கிறது.  இதுவரை பல நாடுகளை நிலைகைலைய செய்துள்ள இந்த வைரஸ் இன்னமும் ஆரம்பத்தில் தொடங்கிய அதே வைகத்தில் உலகை தீவிரமாக தாக்கி வருகிறது.   சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டத்திலும்  தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது . இந்நிலையில் உலக அளவில் இனம் மொழி என எல்லைகள் கடந்து  இந்த வைரசுக்கு 16 லட்சத்து 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  

அதுமட்டுமின்றி  இதுவரை இந்த வைரசுக்கு பலியானவர்களின்  எண்ணிக்கை ஒரு லட்சத்து 2,000 ஆக அதிகரித்துள்ளது ,  கடந்த வாரத்தில் பலி எண்ணிக்கை  நாற்பதாயிரத்தை கடந்திருந்த நிலையில்  இந்த ஒரே வாரத்தில் ணுமார் 60,000 பேரின் உயிரை குடித்துள்ளது இந்த வைரஸ்.  இந்த பலி எண்ணக்கை  இது ஒட்டுமொத்த உலகையும்  அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 4 ஆயிரத்து  780 ஆக உள்ளது ,  அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களாக பலி எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக உள்ளதால் அங்கு உயர்ந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது .  ஏற்கனவே பலி எண்ணிக்கையில் முன்னணியில்  உள்ள இத்தாலியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 549 ஆக உள்ளது ,  மூன்றாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 81 ஆக உள்ளது . 

 

நான்காவது இடத்தில் உள்ள பிரான்சில் இதுவரை 13 ஆயிரத்து 197 பேர் வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர் ,   இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன,  இந்நிலையில் உயிரிழந்தவர்களின் பட்டியலில்  இத்தாலி முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் ,  அமெரிக்கா பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் அடுத்த 24 மணிநேரத்தில் இத்தாலியை முந்தி அமெரிக்காவில் அப்பட்டியலில் முதலிடத்தை  பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .  இதுவரையில் இந்த வைரஸை  எப்படி கட்டுப்படுத்துவது என புரியாமல் உலகநாடுகள் திகைத்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மட்டுமே இதற்கு ஒரே தீர்வு என  என்றும்  இந்த வைரசை மட்டுபடுத்துவதற்கான ஒரு வழி என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது, இந்நிலையில் இந்த வைரசுக்கான பலி எண்ணிக்கை மேலும் தொடரும் என்றும் அடுத்த வாரத்தில் இதன் எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது எனவும் அமெரிக்காவின் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. குறிப்பிட தக்கது.  

 

click me!