கொரோனா வந்த பின்னர் உடலில் ஏற்படும் மாற்றம்..!! அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நோயாளிகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 11, 2020, 12:41 PM IST
Highlights

வைரசில் இருந்து குணமடைந்ததற்கு பின்னரும் இப்படி உணர்வதாக தெரிவித்துள்ளனர்.  இன்னும் சிலரோ தங்கள் உடலில் ஏதோ மின்சாரம் பாய்ச்சுவது போன்று தாங்கள் அடிக்கடி  உணர்வதாக தெரிவித்துள்ளனர் .

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீண்ட பின்னரும் ஒருவிதமான உடல் எரிச்சல் மற்றும் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது  போன்ற உணர்வுக்கு ஆட்படுவதாப தெரிவித்துள்ளனர்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுக்கு ஏற்படும் அனுபவத்தை பதிவிட்டு வருகின்றனர் அதில் பெரம்பாலானோர் இவ்வாறு கூறி வருகின்றனர், கொரனா  வைரஸ் உலகம் மழுவதும் வேகமாக பரவி வருகிறது இந்த வைரசை  கட்டுப்படுத்த முடியாமல் உலகநாடுகள் இதை எதிர்த்து போராடி வருகின்றன .  இந்த வைரசுக்கு இதுவரையில் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து கடந்துள்ளது ,  குறிப்பாக  இத்தாலி ,  ஸ்பெயின் ,  அமெரிக்கா ,  இங்கிலாந்து ,  பிரான்ஸ் ,  உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .

 

இந்நிலையில்  இந்த வைரஸ் உடலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து உலக ஆராய்ச்சியாளர்கள் புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் . நிலையில் இந்த  வைரஸ் ஒருவரை தாக்கினால் அவருக்கு நிமோனியா அறிகுறிகள் தென்படுவது இயல்பான ஒன்று என்றாலும் பலருக்கு இது சாதாரண காய்ச்சல் போல அதவாது இருமல், மூச்சுத் திணறல் , வாசனையை நுகரும் திறன் அற்றுப் போதல் ,  சுவையை அறியும் திறன் அற்றுப் போதல் போன்ற  பிரச்சனைக்கு ஆட்படுவர் என ஏற்கனவே மருத்துவர்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளது.   எனவே இந்த அறிகுறிகளை வைத்து தனக்கு கொரொனோ தொற்று  உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டு  அதிலிருந்து மீண்டு வந்த பலர் ,  கொரோனா வைரஸ் காய்ச்சலின்போதும் வைரசில் இருந்து குணமானதற்கு பின்னரும்  தங்கள் உடலில் பல வித்தியாசமான பக்க விளைவுகளை தாங்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர் ,

 

பலர் தங்களின் உணர்வுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு  வருகின்றனர் ,  அதில் ஏராளமானோர் கொரோனா வைரஸ் தாக்கிய போது  தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு உடல் வெப்பம் ஏற்பட்டதுடன் ,  ஒருவித எரிச்சலை தாங்கள் உணர்வதாக தெரிவித்துள்ளனர்.  வைரசில் இருந்து குணமடைந்ததற்கு பின்னரும் இப்படி உணர்வதாக தெரிவித்துள்ளனர்.  இன்னும் சிலரோ தங்கள் உடலில் ஏதோ மின்சாரம் பாய்ச்சுவது போன்று தாங்கள் அடிக்கடி  உணர்வதாக தெரிவித்துள்ளனர் .  பொதுவாக கொரோனா வைரஸ் என்றால் உடற்சோர்வு வரட்டு இருமல் சளி தலைவலி பக்கவாதம் வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுவது வழக்கம் ,  ஆனால் தற்போது மேலும் இந்த வைரஸால் இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுவதாக  மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் யோசிக்க வைத்துள்ளது . 

இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள்  இது ஒரு விதமான மன அதிர்ச்சியினால் ஏற்படக்கூடிய உணர்வு ,  ஏற்கனவே கொரோனா வைரஸ் குறித்து  மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில், அந்த வைரசால் தாங்கள்  ஆட்படும் போது அந்த அதிர்ச்சியில் இது போல  உணரக் கூடும் என தெரிவித்துள்ளனர் .  இன்னும் சில மருத்துவர்கள் கொரோனா  வைரஸ் பொதுவாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்பதால் அதனால் இது போன்ற உணர்வுகள் ஏற்படக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.  இது போன்ற உணர்கள் அனைவருக்கும் இருப்பதில்லை சிலர் மட்டுமே இப்படி  உணரக்கூடும் என தெரிவித்துள்ளனர் .  இதற்கு முன்னதாக இதுபோன்ற ஒரு காய்ச்சலை மக்கள் அனுபவித்து இருக்க மாட்டார்கள் ,  எனவே இந்த காய்ச்சல் மற்ற காய்ச்சலை விட வித்தியாசமானது என்பதால் இப்படி உணரக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 

click me!