வேலையே செய்யாத ஊழியருக்கு முழு சம்பளம் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனம்!

By SG BalanFirst Published Jun 23, 2024, 11:02 PM IST
Highlights

ஆரம்பத்தில், தன்னால் செய்யக்கூடிய பணிகளை வழங்கியதாகவும் 2002 இல், பிரான்சிற்குள் வேறு ஒரு பகுதிக்கு இடமாற்றம் பெற்ற பிறகு, பொருத்தமான மாற்று வேலையை வழங்குவதற்குப் பதிலாக, எந்த வேலையையும் வழங்கவில்லை என்று லாரன்ஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

பிரான்சில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஆரஞ்ச் மீது ஒரு பெண் வினோதமான வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். 20 ஆண்டுகளாக முழு சம்பளத்தையும் வழங்கிவிட்டு, தனக்கு எந்த வேலையும் ஒதுக்காமல் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மாற்றுத் திறனாளியான லாரன்ஸ் வான் வாசன்ஹோவ் 1993இல் ஆரஞ்ச் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் தனக்கு இருக்கும் வலிப்பு மற்றும் முடக்குவாதம் காரணமாக வேறு இடத்திற்கு பணியிட மாறுதல் கோரியுள்ளார். அதன்படி இடமாறுதல் பெற்ற பின்னர் நிறுவனம் அவருக்கு வேலைகளை ஒதுக்குவதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

Latest Videos

ஆரம்பத்தில், தன்னால் செய்யக்கூடிய பணிகளை வழங்கியதாகவும் 2002 இல், பிரான்சிற்குள் வேறு ஒரு பகுதிக்கு இடமாற்றம் பெற்ற பிறகு, பொருத்தமான மாற்று வேலையை வழங்குவதற்குப் பதிலாக, எந்த வேலையையும் வழங்கவில்லை என்று லாரன்ஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

பூமி மீது மோதப்போகும் சிறுகோள்! தேதியைக் குறித்த நாசா விஞ்ஞானிகள்! என்ன நடக்கப்போகுதோ...

அதிலிருந்து 20 வருடங்களாக தனக்கு முழு சம்பளத்தையும் கொடுத்தாலும், மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப வேலை வழங்காததை துன்புறுத்தலாக உணர்ந்ததாக வான் வாசன்ஹோவ் கூறியுள்ளார். எந்தவொரு பணியும் செய்யாமல் ஊதியம் கொடுத்து தன்னைத் தனிமைப்படுத்திவிட்டதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வேலை செய்யாததால் தனது தொழில்திறனை இழப்பதாகவும் லாரன்ஸ் வாதிடுகிறார்.

ஆனால், ஆரஞ்சு நிறுவனம் லாரன்ஸின் குற்றச்சாட்டை மறுக்கிறது. அவரை சரியான முறையிலேயே நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது. வான் வாசன்ஹோவின் மருத்துவ நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு, பணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை பரிசீலனை செய்துவருவதாகவும் கூறியுள்ளது. ஆனால், லாரன்ஸ் தொடர்ந்து உடல்நலக்குறைவுக்கான விடுப்பு எடுத்தது அதைக் கடினமாக்கியது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளளது.

இது குறித்து லாரன்ஸ் வான் வாசன்ஹோவின் வழக்கறிஞர்கள் கூறுகையில், ஆரஞ்சு நிறுவனம் லாரன்ஸுக்கு நியாயமான இடவசதிகளை வழங்கத் தவறிவிட்டதாகவும், அவரைத் தொழில்ரீதியாக நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

வெற லெவல் கிரியேட்டிவிட்டி! ட்ரெண்டுக்கு ஏற்ப இசை அமைக்கும் AI மியூசிக் ஜெனரேட்டர்கள்!

click me!