நோட்டீஸ் கொடுத்த காவலர், கடுப்பான பெண்! நிமிடங்களில் ஷூட் அவுட் - நடந்தது என்ன?

By Kevin KaarkiFirst Published Mar 16, 2022, 10:42 AM IST
Highlights

நோட்டீஸ் கொடுக்க வந்த காவரை கத்தியால் குத்திய பெண், போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நோட்டீஸ் கொடுக்க வந்த போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்திய பெண், போலீஸ் நட்த்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் அரங்கேறி இருக்கிறது.

நம் ஊரில் இருப்பதை போன்று இல்லாமல், வெளிநாட்டு காவல் துறையினர் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களை தங்களின் தற்காப்பு மற்றும் சட்ட விரோதிகளிடம் அவசர காலத்தில் உபயோகிக்க பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அமெரிக்க காவல் துறையில் அதிவேக கார்கள், காவல்துறையினர் உடையில் வீடியோ கேமரா, மைக்ரோபோன் என ஏராளமான தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டு, எப்போதும் அவை செயல்பாட்டிலேயே இருக்கும். 

இதனாலேயே பெண் சுட்டுக் கொல்லலப்ட்ட சம்பவம் அடங்கிய வீடியோவும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. போலீஸ் அதிகாரிகள் உடையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவான காட்சிகளே தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில நிமிடங்கள் ஓடும் வீடியோ, பார்க்க சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையில் இருக்கிறது.

சான் டியாகோ நகரின் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் காவல் துறை அதிகாரி வீட்டின் கதவை தட்டுகிறார். பின் தான் தேடி வந்த நபர் அந்த வீட்டில் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்துகிறார். வீட்டு வாசலை அடைந்ததும் போலீஸ் அதிகாரி, வீட்டின் கதவை சில முறை தட்டினார். பின் வீட்டினுள் இருப்பவர் வந்ததும் அவரிடம் பெயரை கேட்டு கொண்டார். போலீஸ் அதிகாரி தேடி வந்தது யான்  லி என்ற 47 வயதான பெண் ஆகும். 

யான் லி கதவை திறக்கும் முன், தனது பெயரை போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்தார். பின் கையில் கத்தியுடன் கதவை திறந்தார். கத்தியை பார்த்ததும் சுதாரித்து கொண்ட போலீஸ் அதிகாரி, தான் கொண்டு வந்த எவிக்‌ஷன் நோட்டீசை யான் லியிடம் கொடுத்தார். பின் யான் லி கையில் வைத்து இருந்த கத்தியை கீழே போடுமாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். பதிலுக்கு கோபத்துடன் பேசிய யான் லி கத்தியை கீழே போட மறுத்தார். 

யான் லி செயலை கண்டு ஆத்திரமடைந்த போலீஸ் அதிகாரி, யான் லி-யை வசைபாடி கொண்டே கத்தியை கீழே போடுமாறு கூறினார். பின் தனது உதவிக்கும் மேலும் சில காவல் துறை அதிகாரிகளை உடனடியாக மேலே வரச் சொன்னார். சில நிமிடங்கள் நடந்த பரபர விவாதத்திற்கு பின் யான் லி கதவை மூடிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார். உடனடியாக மேலும் சில காவல் துறையினர் யான் லி வீட்டு வாசலில் குவிந்தனர். 

கையில் கத்தியுடன் உள்ளே சென்ற யான் லியை மீட்க போலீசார் கதவை உடைத்துக் கொண்டு வேக வேகமாக உள்ளே சென்றனர். பின் வீட்டின் ஒரு அறையில் இருந்து யான் லி வெளியே வந்தார். அவரை போலீசார் சுற்று வளைத்து கத்தியை கீழே போடுமாறு வலியுறுத்தினர். பின் வாக்குவாதம் முற்றிப் போக யான் லி போலீஸ் அதிகாரியை தான் வைத்திருந்த கத்தியால் தாக்கினார். போலீஸ் அதிகாரி கத்தி குத்து வாங்கிய தை பார்த்த மற்றொரு அதிகாரி யான் லியை சம்பவ இடத்திலேயே சுட்டார். 

துப்பாக்கி குண்டு யான் லி உடலை பதம் பார்த்ததும், நொடிகளிலேயே அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் யான் லி உயிரிழந்தார். 

click me!