
துருக்கி இப்போது உலகிற்கு தெரிந்த பெயர். முன்பு இந்த நாட்டை டர்க்கி என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் அந்த வார்த்தைக்கு "மூடன்" என்ற பொருள் இருப்பதால், தன் நாட்டின் பெயரால் அவமானம் ஏற்படுகிறது என்று கருதி டர்க்கி அரசு அதை "துருக்கி" என்று மாற்றிக்கொண்டது. பெயர் மாறினாலும், நாட்டின் அரசியல் நிலைப்பாடு மாறவில்லை. இந்தியா மீது துருக்கிக்கு ஒருவித வெறுப்பு இருப்பது புதிதல்ல.
கடந்த காலங்களில் இந்தியாவுக்கு உதவிய சந்தர்ப்பங்கள் இருந்தாலும், பின்னர் துருக்கி நடந்துகொண்ட விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சில மாதங்களுக்கு முன்பு துருக்கியில் ஏற்பட்ட பெரிய பூகம்பத்திற்குப் பிறகு, மிக விரைவாக உதவி அளித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மருத்துவக் குழுக்கள், உதவிப் பணியாளர்கள், தேவையான வசதிகளுடன் இந்தியா உதவியது.
ஆனால் துருக்கி காட்டிய நன்றியுணர்வு உண்மையானதாக இல்லை. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காமில் மேற்கொண்ட தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டிருந்த ஒன்பது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவளித்தது. இது இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
இவற்றையெல்லாம் தவிர்த்து, துருக்கி கடந்த காலங்களில் பல சர்வதேச அரங்குகளில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசியுள்ளது. காஷ்மீர் ஒரு சர்வதேச பிரச்சினை என்ற பாகிஸ்தானின் கருத்துக்கு ஆதரவளித்தது. ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியா மீது விமர்சனங்களை முன்வைத்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது.
இதுவரை நடந்தவற்றைப் பார்க்கும்போது, துருக்கி ஏன் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. வளரும் நாடாக இருக்கும் துருக்கி, சர்வதேச அளவில் தனது மதிப்பைக் குறைத்துக்கொள்கிறது. மத அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து, அரசியல் லாபங்களுக்காக இந்தியா மீது வெறுப்பை தொடர்கிறது. இந்தியா நடுநிலையாக நடந்துகொண்டு, நட்பு நாடுகளுக்கு உதவி செய்வதில் முன்னணியில் உள்ளது. ஆனால் துருக்கி தனக்கு கிடைத்த நட்பை சரியான முறையில் பயன்படுத்தவில்லை. இந்த நிகழ்வுகள், துருக்கியின் அரசியல் போக்கில் மாற்றம் வர வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.
பஹல்காம் சம்பவத்தை அடுத்து, 'துருக்கியை புறக்கணிக்கவும்' என்ற தலைப்பில் பயண ரத்து உச்சத்தை எட்டியுள்ளது. இந்திய சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். "சமீபத்திய புவிசார் அரசியல் பதற்றங்கள் பயண முறைகளை கணிசமாக பாதிக்கின்றன. ரத்து விகிதங்கள் துருக்கிக்கு 22% மற்றும் அஜர்பைஜானுக்கு 30% எட்டியுள்ளன. பயணிகள் ஜார்ஜியா, செர்பியா, கிரீஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற இடங்களைத் தேர்வு செய்து வருகின்றனர். போர்நிறுத்தத்திற்கு பிந்தைய நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.