பாகிஸ்தானுக்கு செல்கிறார் பிரதமர் மோடி! காரணம் என்ன தெரியுமா?

First Published Aug 4, 2018, 5:41 PM IST
Highlights

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி வெற்றிபெற்றுள்ளது. ஆனாலும், ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், உதிரிக்கட்சிகளை தன்னோடு இணைக்கும் நிகழ்ச்சியில் மும்முரம் காட்டி வரும் இம்ரான் கான், வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி பாகிஸ்தான்பிரதமராக தான் பதவி ஏற்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னரே, இந்தியாவுடன் இணக்கமான உறவை மேம்படுத்த விரும்புவதாக, இம்ரான் கான் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது கட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றதால், இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி தொலபேசி மூலம் வாழ்த்து கூறினார். இது இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை புதுப்பிக்கும்வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. வாழ்த்துக்கு நன்றி கூறிய இம்ரான் கான், “போருக்கு பதில், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் “ என்றுபிரதமர் மோடியிடம் கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை அழைப்பது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனையை பெற உள்ளதாக கூறப்படுகிறது.
 
2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே உறவு சிக்கலில் இருக்கிறது. ஆனால், 2014ஆம்ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றபோது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அதேபோல் நவாஸ் ஷெரீப்பின் பிறந்தநாளுக்கு லாகூர் சென்று, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
 
சுமூகமாக இருதரப்பு உறவு தொடர்ந்த நிலையில், 2016ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் தீவிரவாத தாக்குதல்களால்மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. இப்போது மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு ஏற்பட வாய்ப்புகிடைத்துள்ளது. இந்த நிலையில் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி மட்டுமின்றி, சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களையும் அழைக்க தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!