புதிய பிரதமராக பதவியேற்பதில் இம்ரான் கானுக்கு சிக்கல்!

First Published Aug 4, 2018, 5:27 PM IST
Highlights

புதிய பிரதமராக பதவியேற்பதில் இம்ரான் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் விழா 11-ம் தேதி என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென எதிர்கட்சிகள் இணைந்து அரசு அமைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.

புதிய பிரதமராக பதவியேற்பதில் இம்ரான் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் விழா 11-ம் தேதி என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென எதிர்கட்சிகள் இணைந்து அரசு அமைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன. மேலும் சிறிய கட்சிகளின் நிபந்தனைகளால் இம்ரான் கான் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 

பெனாசீர் பூட்டோ மகன் பிலாவலின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் அல் அமல் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி 117 இடங்களை கைப்பற்றியது. ஆனால் ஆட்சியமைக்க 137 இடங்கள் தேவைப்படுகிறது. 

சிறிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சிகளுடன் சிறிய கட்சிகள் இணைந்துள்ளன. இம்ரான் கான் பதவியேற்புகான அழைப்பை பாகிஸ்தான் தெஹரிக் இன்சாப் கட்சி திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!