ஓவியம் வரைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அதிசய பன்றிக்குட்டி; எங்கு தெரியுமா?

 |  First Published Aug 4, 2018, 5:27 PM IST

தேவர் ஃபிலிம்ஸ் படங்களில் எல்லாம் யானை, குரங்கு, நாய் போன்ற மிருகங்கள் வீட்டில் இருக்கும் ஒரு நபர் போலவே சகஜமாக வேலைகளை செய்யும். இந்த அதிசய காட்சியை பார்ப்பதற்கே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும்


தேவர் ஃபிலிம்ஸ் படங்களில் எல்லாம் யானை, குரங்கு, நாய் போன்ற மிருகங்கள் வீட்டில் இருக்கும் ஒரு நபர் போலவே சகஜமாக வேலைகளை செய்யும். இந்த அதிசய காட்சியை பார்ப்பதற்கே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். குரங்கு குழந்தைக்கு தலை சீவி பூ வைத்து விடுவது, நாய் கடைக்கு சென்று காய்கறி வாங்கி வருவது, என ரசிக்குபடியான அந்த காட்சிகளை தமிழ் ரசிகர்கள் இன்றும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இது போன்று நடந்துகொள்வதற்கு அந்த மிருகங்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கும். அப்படி தான் ஒரு பன்றிக்குட்டிக்கும் அதன் உரிமையாளர் ஓவியம் வரைய பயிற்சி அளித்திருக்கிறார். விளையாட்டாக அவர் கற்று கொடுத்த அந்த பயிற்சியை கற்பூரம் போல கற்றுக்கொண்ட அந்த பன்றி , இப்போது ஓவியங்களை வரைந்து தள்ளுகிறதாம்.

Latest Videos

வாயில் பிரஷ் பிடித்து அந்த பிரஷினை வண்ணகலவையில் தொட்டு, லாவகமாக அந்த பன்று வரையும் ஓவியங்கள் ஒவ்வொன்றும், 300 முதல் 4000 டாலர் வரை விலை போகிறதாம். நம்மூர் பண மதிப்பில் லட்சங்களை தொடும் இந்த பண மதிப்பு. இந்த பன்றி வரைந்த ஓவியங்கள் ஆர்ட் மியூசியத்தில் கூட இடம் பிடித்திருக்கிறதாம்.

இரண்டு வயதான இந்த பெண் பன்றிக்குட்டி தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறது. உலகிலேயே ஓவியம் வரையும் முதல் விலங்கு என்ற பெருமை இந்த பன்றிக்குட்டியையே சாரும். இதனாலேயோ என்னவோ, கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் இதை விற்க மறுத்திருக்கிறார் இதன் உரிமையாளர்.

click me!