இது ரத்த பூமி... ஈரானில் சிகப்பு நிறத்தில் ஓடிய வெள்ளம் - அதன் வியக்க வைக்கும் பின்னணி இதோ

Published : Mar 13, 2025, 02:31 PM IST
இது ரத்த பூமி... ஈரானில் சிகப்பு நிறத்தில் ஓடிய வெள்ளம் - அதன் வியக்க வைக்கும் பின்னணி இதோ

சுருக்கம்

ஈரானில் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள கடற்கரை இரத்த நிறத்திற்கு மாறி இருக்கிறது. அது எதனால் அப்படி ஆனது என்பது பற்றி பார்க்கலாம்.

Bizzare Blood rain in Iran : ஈரானில் கடற்கரை ஒன்று ரத்த நிறத்திற்கு மாறிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ ஈரானின் வானவில் தீவில் எடுக்கப்பட்டது. அங்கு கடந்த மாதம் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கடற்கரையில் கலக்கிறது. ஆனால் அதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த வெள்ள நீர் இரத்தம் போல் சிகப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. அது கடலில் கலந்ததும் அந்த கடலும் சிகப்பு நிறத்திற்கு மாறிவிட்டது.

ரத்த நிற வெள்ளத்திற்கு காரணம் என்ன?

இது அங்குள்ள வானிலை மாற்றத்தால் நிகழ்ந்திருக்கக்கூடும் என்றும் வலைதளவாசிகள் விவாதித்து வந்தாலும், அந்த ரத்த நிற வெள்ளத்திற்கு காரணம் அங்குள்ள மணல் தான். அப்படி அதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அங்குள்ள எரிமலை பாறைகளில் இருந்து வரும் இரும்பு ஆக்ஸைடுகளால் இங்கு செம்மண் உள்ளது. இங்கு இருக்கும் 80க்கும் மேற்பட்ட தாதுக்களால் அங்குள்ள பாறைகள் சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் ஒளிர்கின்றன.

இதையும் படியுங்கள்... Security Belt 2025 | சீண்டிய டிரம்ப்! ஒன்றிணைந்த சீனா,ரஷ்யா,ஈரான்! 3 ம் உலக போரின் தொடக்கமா?

ஈரான் சிகப்பு மண்ணுக்கு இவ்வளவு மவுசா?

இந்த இரும்பு ஆக்ஸைடுகள் நிறைந்த செம்மண் கடல் நீரில் கலப்பதால் தான் அந்த வானவில் தீவில் உள்ள கடலும் இரத்த சிவப்பு நிறத்திற்கு மாறி உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள மணல், அழகுசாதனப் பொருட்கள் செய்யவும், சாய தொழிற்சாலைகளிலும், மண்பாண்டங்கள் செய்யவும், கண்ணாடிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறதாம். இதுதவிர அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதை ஜாம் அல்லது சாஸ் செய்யவும் பயன்படுத்துவார்கள் என கூறப்படுகிறது.

ஈரானில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

இந்த கடற்கரை ஈரானின் மத்திய பகுதியில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இந்த சிவப்பு கடலை காண சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிகளவில் வரத் தொடங்கி உள்ளார்களாம். மேலும் மாலையில் சூரியன் மறையும் போதும், காலையில் சூர்ய உதயத்தின் போது அந்த கடல் சிகப்பு நிறத்தில் ஜொலிக்குமாம். அதைக்காண அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்களாம்.

இதையும் படியுங்கள்... பெய்ரூட்டில் ஈரான் விமானம் தரையிறங்க தடை விதித்து ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் போராட்டதில் ஈடுபட்டனர் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு