சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக தங்கியுள்ள சுனிதா வில்லியம் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
Trouble to Sunita Williams: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் பணிபுரிகிறார். விண்ணில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏற்கனவே 2 முறை சென்று வந்த சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஜூன் 5ஆம் தேதி, ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் மீண்டும் விண்வெளி நிலையத்திற்கு சென்றார்.
சுனிதாவுடன் விண்வெளி வீரர் வில்மோரும் விண்வெளி நிலையம் சென்று 9 நாட்கள் தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாகத்தான் முதலில் திட்டமிட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக, விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சுனிதா வில்லியம், வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழில் நுட்ப கோளாறுகளை சரிசெய்யும் பணியை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர்.
உயிரை பணயம் வைத்து விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க!
இதனிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், நாசா விண்வெளி வீர்ர நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்புனோவ் ஆகியோர், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் என்ற விண்கலம் மூலமாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இந்த விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை அழைத்து வர ஏதுவாக இரண்டு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது. இந்த விண்கலம் மூலம், கடந்த மாதமே பூமிக்குசுனிதா வில்லியம்ஸ் திரும்புவார் என்று கருதப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்தில் இதில் மாற்றம் செய்யப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோரும் எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம், மார்ச் 16ல் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தற்போது அந்த திட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மேலும் தள்ளிப் போகிறது.
இது தொடர்பாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சுனிதா வில்லியம்ஸை அழைத்து வரும் பால்கன் ராக்கெட்டில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 'க்ரூ-10 மிஷன்' என்ற திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, விண்வெளி நிலையத்தில் உள்ள இருவரும் விரைவில் பூமிக்கு திரும்புவர். அவர்களை அழைத்து வர மீண்டும் ராக்கெட் ஏவக் கூடிய தேதி மற்றும் நேரம் விரைவில் வெளியாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் மாபெரும் சரித்திர சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்; முழு விவரம்!