Salmonella outbreak : சாக்லெட் சாப்பிடுவதால் பரவும் சால்மோனெல்லா நோய்.. பெற்றோர்களே உஷார்.! WHO எச்சரிக்கை !!

By Raghupati R  |  First Published Apr 29, 2022, 2:08 PM IST

Salmonella outbreak : சாக்லெட்கள் வாயிலாக, 'சால்மோனெல்லா' எனும் நோய் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாக்லெட்டை சாப்பிட்ட 150 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


லண்டனில் பெல்ஜியம் சாக்லேட் மூலம் சால்மோனெல்லா நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 150 குழந்தைகள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 11 நாடுகளில் இந்தத் தொற்று பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக லண்டனில் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன் உள்ளிட்ட நாடுகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

இதில் 9 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மரணம் எதுவும் பதிவாகவில்லை. சால்மோனெல்லா நோய் என்றால் என்ன? சால்மோனெல்லா நோய் என்பது பாக்டீரியா தொற்று ஆகும். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடல்களில் காணப்படுகிறது. டைப்பாய்டு காய்ச்சலும் இந்த பாக்டீரியா மூலம்தான் ஏற்படுகிறது. 

நோய்த் தொற்று ஏற்பட்ட 2 மணி நேரத்தில் காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும். தொடக்கநிலையிலே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் தீவிர நிலைக்கு செல்லாமல் தடுக்க முடியும். பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, தலைவலி உள்ளிட்டவைகள் இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். 

இந்த நோய் தரமற்ற உணவு மூலம் பரவுகிறது. குறிப்பாக மாசடைந்த உணவுப் பொருட்கள், பச்சையான பால் பொருட்கள், நன்கு வேக வைக்காத இறைச்சி ஆகியவைகள் மூலம் பரவுகிறது. தற்போது சாக்லேட் மூலம் இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : பல்டி அடித்த எடப்பாடி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு.. கொடநாடு கொலை வழக்கில் சிக்குவது யார் ?

click me!