இலங்கையில் இடைக்கால அரசு? அதிபர் கோத்தபய ராஜபக்சே நாளை ஆலோசனை!!

By Narendran S  |  First Published Apr 28, 2022, 9:54 PM IST

இலங்கையில் அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ள நிலையில் நாளை இதுக்குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 


இலங்கையில் அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ள நிலையில் நாளை இதுக்குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த 9 ஆம் தேதி முதல் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை அடுத்து ராஜபக்சே தலைமையிலான அரசை கலைத்து விட்டு, அனைத்து கட்சிகளையும் கொண்ட இடைக்கால கூட்டணி அரசை நிறுவ எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதையே தேர்தல் ஆணையமும் வலியுறுத்தியது. இதனிடையே, மகிந்த ராஜபக்சே வரும் 30 ஆம் தேதிக்குள் பதவி விலகவில்லை என்றால், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

Tap to resize

Latest Videos

ஆனால் ராஜினாமா செய்ய வலியுறுத்தும், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் ஆட்சியில் நீடித்து வருகின்றனர். அதேநேரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன்பெறும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், தங்களுக்கு எதிரான அரசியல் நெருக்கடி மற்றும் பொதுமக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் அனைத்து கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும், சுயேச்சை எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடு தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து கட்சி அரசு அமைக்க கொள்கை அளவில் ஒப்பு கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த அனைத்துக்கட்சி அரசின் வடிவம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை விவாதித்து முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ள கோத்தபய ராஜபக்சே, நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், நாட்டில் அனைத்து கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். அதேநேரம் தான் பதவி விலக மாட்டேன் எனவும், எந்தவித இடைக்கால அரசும் தனது தலைமையில்தான் அமைய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!