1997 முதல் 2012 வரை புதிய உறுப்பினர்கள் யாரையும் சேர்க்கக் கூடாது என்ற தீர்மானம் அமலில் இருந்தது. இதுவும் இந்தியா ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் சேர்க்கப்படாததற்கு காரணமாக இருந்திருக்கிறது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று அமெரிக்காவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் சந்திக்கின்றனர். 2021இல் ஜோ பிடன் பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இரு தலைவர்களும் சந்திக்கின்றனர்.
தைவான் பிரச்சினை, வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக அமெரிக்கா - சீனா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. தற்போது இஸ்ரேல் ஹமாஸ் போர், ரஷ்யா உக்ரைன் போர்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடப்பதால் இது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு:
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (APEC) 1989இல் உருவாக்கப்பட்டது. தற்போது இதில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இந்தியா இந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை. 1991ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் சேருமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெரும்பாலான நாடுகள் ஆதரவாக இருந்த நிலையில், சில நாடுகள் இந்தியாவை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தன.
தடைசெய்யப்பட்ட 70% FDC மருந்துகள் இன்னும் விற்பனையில் உள்ளன: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
பின்னர், 1997 முதல் 2012 வரை புதிய உறுப்பினர்கள் யாரையும் சேர்க்கக் கூடாது என்ற தீர்மானம் அமலில் இருந்தது. இதுவும் இந்தியா இந்த அமைப்பில் சேர்க்கப்படாததற்கு மற்றொரு காரணமாக இருந்திருக்கிறது.
ஆஸ்திரேலியா, புருனே, ஹாங்காங், நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா, கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, பெரு, சிலி, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் தற்போதைய உறுப்பினர்களாக் உள்ளன.
இந்த ஆண்டில்:
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62% அளவுக்குப் பங்காற்றுகின்றன. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட பாதியை இந்த நாடுகள் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சான் பிரான்சிஸ்கோவில் நவம்பர் 15 முதல் 17 வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகிய முக்கிய தலைவர்களும் பங்கேற்கிறார்கள். ரஷ்யாவின் சார்பில் துணைப் பிரதமர் அலெக்ஸி ஓவர்சுக் கலந்துகொள்கிறார்.
கிராமி விருதுக்கான ரேஸில் பிரதமர் மோடி எழுதிய சிறுதானியங்கள் பற்றிய பாடல்