Rishi Sunak Challenges:பிரிட்டனைக் காப்பாற்றுவாரா? ரிஷி சுனக்கிற்கு காத்திருக்கும் 9 சவால்கள் என்ன?

By Pothy RajFirst Published Oct 25, 2022, 12:26 PM IST
Highlights

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பிரிட்டனை எவ்வாறு மீட்கப்போகிறார்,  திட்டங்கள் என்பது பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் ரிஷி சுனக் மீது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பிரிட்டனை எவ்வாறு மீட்கப்போகிறார்,  திட்டங்கள் என்பது பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் ரிஷி சுனக் மீது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

முன்னாள் நிதிஅமைச்சரான ரிஷி சுனக் கொரோனா காலத்தில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்திய மினி பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோன்று பிரிட்டனின் நலனுக்காக, பொருளாதார வளர்ச்சிக்காக புதிதாக திட்டங்களை வகுப்பார் என்று கட்சி பாகுபாடின்றி மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

ஆனால் கடந்த 200 ஆண்டுகளில் பிரிட்டனில் இளம் வயது பிரதமராக அமரப்போகும் ரிஷி சுனக் மீது 9 விதமான சவால்கள் காத்திருக்கின்றன.அவற்றைக் காணலாம்.

வரி
பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன் இருப்பது மக்களுக்கான வரிச் சலுகையைக் குறைப்பதாகும். ரிஷி சுனக் ஏற்கெனவே கூறியிருந்ததைப்போல் வருமான வரியை 20 சதவீதத்திலிருந்து 16சதவீதமாகக் குறைப்பேன் எனும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஆனால், இந்த வரிக்குறைப்பை உடனடியாக ரிஷி சுனக் அமல்படுத்தமாட்டார் எனத் தெரிகிறது.  உடனடியாக அமல்படுத்தினால், பிரிட்டனில் தற்போது இருக்கும் பணவீக்கம் மலேும் அதிகரிக்கும், பொருளாதார மந்தநிலை வேகமாக வந்துவிடும்.

நெஹ்ராவோடு ஒப்பீடு! கோஹினூர் வைரத்தை மீட்டுக்கொடுங்கள் ரிஷி சுனக்!நெட்டிசன்கள் மீம்ஸ்

ஆதலால், நீண்டகால நோக்கில்தான் இந்த வரிக்குறைப்பை செயல்படு்த்த வேண்டும். கார்ப்பரேட் வரியை 19 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார். ஆனால், லிஸ்டிரஸ் இந்த வரியை ரத்து செய்தார். இதனால் மீண்டும் கார்ப்பரேட் வரியை 25 சதவீதமாக ரிஷி சுனக் உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளார்.

ஊழியர்கள், தொழில்நிறுவனங்களுக்கான கேசிய காப்பீடுக்கான தொகையை 1.25% உயர்த்தவேண்டிய நிலையில் ரிஷி சுனக் உள்ளார். இந்த காப்பீடு தொகையை லிஸ் டிரஸ் குறைத்துவிட்டார் அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும்

செலவிடுதல்
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதால், உற்பத்தி அடிப்படையிலான செலவுகளுக்குத்தான் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால், என்ன மாதிரியான செலவுகளை அரசு செய்யப் போகிறது என்பது குறித்து ரிஷி சுனக் இதுவரை ஏதும் கூறவில்லை. மக்களுக்கு ஏதேனும் சலுகைகளை, படிகளை அளித்தால், பணவீக்கத்தை மேலும் உயர்த்தும். ஆதலால்,பணவீக்கத்தை உயர்த்தாமல் அதேசமயம், வளர்ச்சியை அதிகரி்க்கக்கூடிய செலவுகளுக்கு முக்கியத்துவம அளிக்கவேண்டும்

எரிபொருள் விலை உயர்வு

உக்ரைன்-ரஷ்யா போரால் பிரிட்டனில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், இயற்கை எரிவாயுவிலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்தினாலோ பணவீக்கம் பாதியளவு குறைந்துவிடும். இதை சமாளிக்க ரிஷி சுனக் வைத்திருக்கும் திட்டம் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நெஹ்ராவோடு ஒப்பீடு! கோஹினூர் வைரத்தை மீட்டுக்கொடுங்கள் ரிஷி சுனக்!நெட்டிசன்கள் மீம்ஸ்

2045ம் ஆண்டுக்குள் பிரிட்டனை எரிபொருள் சாரா நாடாக மாற்றுவேன் என்று சுனக் பிரச்சாரத்தின்போது பேசியிருந்தார் அதற்கான திட்டம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளார். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத பசுமை சக்தியை பயன்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் ரிஷி சுனக் திட்டங்களை அறிவிக்கவேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

வடக்கு அயர்லாந்து நெறிமுறை(Northern Ireland Protocol)

வடக்கு அயர்லாந்து நெறிமுறை என்பது வர்த்தக ஒப்பந்தமாகும். பிரக்சிட் விவகாரத்தில் வடக்கு அயர்லாந்து எல்லையைக் கடந்து செல்லும் சரக்கு வாகனங்களை பரிசோதிக்க தேவையில்லை என்பதாகும். பிரக்சிட்டுக்கு முன்பாக ஐரோப்பிய யூனியன் விதிகள் பிரிட்டனிலும், அயர்லாந்திலும் பின்பற்றப்பட்டது. தற்போது பிரிட்டன் வெளியேறிவிட்டால், அயர்லாந்து ஐரோப்பிய விதிகளை பின்பற்ற வேண்டிய நிலை இருக்கிறது இது பிரி்ட்டனுக்கு பொருந்தாது. இதற்காக வடக்கு அயர்லாந்து நெறிமுறை மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டிய நிலை பிரிட்டனுக்கு இருக்கிறது

குடியேற்றச் சிக்கல்கள்

பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்; பிரதமர் மோடி வாழ்த்து!

வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் அகதிகளை ஆண்டுதோறும் ஏற்றுக்கொள்வதில் முறைப்படுத்த வேண்டிய சிக்கலை ரிஷி சுனக் சமாளிக்க வேண்டும். பிரிட்டனிக்கு வரும் அகதிகளுக்கான தகுதிகளையும், எத்தனை பேர் என்பதையும் வரைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் சுனக் உள்ளார். சட்டவிரோத குடியேற்றத்துக்கு ரிஷி சுனக் எதிரானவர் என்பதால் அதை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது சவாலாக இருக்கிறது

உக்ரைன் விவகாரம்

ரஷ்யா  உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டன் நிற்கிறது. ரிஷி சுனக்கும் உக்ரைனுக்கு ஆதரவாகவே இருக்கிறார். இதில் உக்ரைனுக்கு உதவும் வகையிலும், நாட்டின் பாதுகாப்பு துறையை மேம்படுத்தும் வகையிலும் செலவினங்களை எவ்வாறு ரிஷி சுனக் முறைப்படுத்தப்போகிறார் என்பது சவாலானதாகும். பிரிட்டனின் பாதுகாப்பு செலவுகளை அதிகப்படுத்த வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் எச்சரித்துள்ளார். ஆதலால், அந்த நெருக்கடியும் ரிஷி சுனக்கிற்கு இருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

ரிஷி சுனக் கடந்து வந்த அரசியல் பாதை! பிரிட்டன் எம்.பி. முதல் பிரதமர் வரை!

சுகாதாரம் மற்றும் சமூகபாதுகாப்பு செலவு
நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்பு செலவுகளை அதிகப்படுத்திய வேண்டிய சவாலை ரிஷி சுனக் சந்திக்க உள்ளார். இந்த செலவுகளைச் சமாளிக்கவே தேசிய காப்பீட்டுக்கான தொகையை உயர்த்தவும் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் பிரிட்டனில்உள்ள நடுத்தர மக்கள், ஏழைகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கும போதுமான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். ஆனால் நிதி ஆதாரங்களை மேம்படுத்த ரிஷி சுனக் இதுவரை திட்டங்களை வெளிப்படுத்தவில்லை.

பாலின விவகாரம்
பிரிட்டனில் வளர்ந்து வரும் கலாச்சார மாற்றம், உரிமை எழுச்சி சிக்கல்களையும் ரிஷி சுனக் சமாளிக்கவேண்டிய நிலையில் இருக்கிறார். ஒரே பாலினத்தவர்கள் திருமணம், எல்ஜிபிடி சமூகத்தினரின் உரிமை கோரல், பெண் உரிமைகள் விவகாரங்கள் அதிகரித்து வருகிறது. 

வரலாறு படைக்கிறார் ரிஷி சுனக்! பிரிட்டன் பிரதமராக வரும் 28ம் தேதி பதவி ஏற்பு

பழமைவாதக் கட்சியைச் சேர்ந்தவான ரிஷி சுனக், எல்ஜிபிடி சமூகத்தினருக்கு உரிய உரிமைகளை வழங்குவாரா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ரிஷி சுனக் அளித்த பேட்டிகளில், “ எல்ஜிபிடி சமூகத்தினர் உண்மையான பாலினம் என ஏற்க முடியாது”எனத் தெரிவித்திருந்தார். இதனால் இவர்களின் உரிமை கோரல் எழுச்சி, ரிஷி சுனக்கிற்கு தலைவலியாக மாறும்

வாழ்க்தைத் தரம்
பிரிட்டனில் பணவீக்கம், பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்தல், மின்கட்டண உயர்வு, வாழ்வாதாரச் செலவு கடுமையாக அதிகரிப்பு போன்ற சிக்கல்களை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இதை எவ்வாறு ரிஷி சுனக் சமாளிப்பார், அதற்கான திட்டங்கள் என்ன என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஓய்வூதியதாரர்கள், ஏழைகளுக்கு தனியாக திட்டத்தை ரிஷி வைத்திருக்கிறாரா என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது


 

click me!