நாங்கள் போருக்குத் தயார்... இந்தியாவுக்கு சவால் விடுத்த பாகிஸ்தான்!

By vinoth kumar  |  First Published Sep 23, 2018, 10:11 AM IST

நாங்கள் எந்த நேரமும் போருக்கு தயாராகவே இருக்கிறோம், ஆனால் மக்கள் நலனுக்காவே அமைதிப் பாதையில் செல்கிறோம் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.


நாங்கள் எந்த நேரமும் போருக்கு தயாராகவே இருக்கிறோம், ஆனால் மக்கள் நலனுக்காவே அமைதிப் பாதையில் செல்கிறோம் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத் தளபதி விபின் ராவத் அளித்த பேட்டியில், இந்திய வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதில், பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளை பழிவாங்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார். 

இதற்கு பதில் அளித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நீண்ட காலமாகவே நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகையால், அமைதியின் விலை என்ன என்பதை பாகிஸ்தான் அறியும். அமைதிக்காக 20 ஆண்டுகள் நாங்கள் போரடி வருவதால், வீரர்களின் அவமதிப்பதுபோல் ஒருபோதும்  நடந்து கொண்டது இல்லை.

Latest Videos

 

இதற்கு முன்பும் இதேபோல, ஒரு வீரரின் தலையை துண்டித்ததாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியது. நாங்கள் நேர்மையாக செயல்படும் ராணுவமாகும். இத்தகைய செயலில் நாங்கள்  ஈடுபட்டதில்லை. போருக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், பாகிஸ்தான் மக்கள், ஆசியக் கண்டத்தில் உள்ள மக்கள், அண்டை நாடுகள் ஆகியோரின் நலன் கருதியே நாங்கள் அமைதிப்பாதையை நோக்க நகர்கிறோம்.

இந்திய அரசு உள்நாட்டில் ஊழல் புகார்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த புகாரில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்திய ராணுவம் போர் தொடர்பான பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்கிறது என்று தெரிவித்தார்.

click me!