Russia-Ukraine Crisis : நேற்று ரஷ்யா.. இன்று உக்ரைன்..ரஷ்யாவை துவம்சம் செய்து சம்பவம்.. உக்ரைன் அதிரடி !!

By Raghupati R  |  First Published Feb 25, 2022, 1:31 PM IST

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போர் தொடுக்க துவங்கியது. குண்டுமழை பொழிந்ததில் ஏராளமானவர்கள் இறந்தனர். இன்று 2வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்துகிறது. 


தரைவழி, வான் வழி, கடல்வழி என தொடர்ச்சியாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்தும் இருக்கிறது.

இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து கீவ் விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளதாக் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. மேலும், ரஷியாவுக்கு எதிராக முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்கும்படி ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். 

ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள  நபர்களின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும்.

இதற்கான நிதியை ஒதுக்கும்படி உக்ரைன் அமைச்சரவையை அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் தான் முதல் நாள் நடந்த போர் குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ‛‛உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையை துவங்கியது முதல் தற்போது வரை 800 ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளனர். 30 டேங்குகள், 130 ஆயுத வாகனங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

7 ரஷ்ய ராணுவ விமானங்கள், 6 ஹெலி லிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டுள்ளன'' என கூறியுள்ளது. இந்த தகவலை துணை ராணுவ அமைச்சர் ஹன்னா மல்யார் கூறியதாக அந்தநாட்டின் ராணுவத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

click me!