Russia-Ukraine Crisis:முதல் நாளிலே மரண பயத்தை காட்டிய உக்ரைன்.. சைலண்டாக 800 ரஷ்ய வீரர்களை கொன்றதாக தகவல்.!

Published : Feb 25, 2022, 12:30 PM IST
Russia-Ukraine Crisis:முதல் நாளிலே மரண பயத்தை காட்டிய உக்ரைன்.. சைலண்டாக 800  ரஷ்ய வீரர்களை கொன்றதாக தகவல்.!

சுருக்கம்

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்த்து வந்தது. இதனால், ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரத்திலும் தாக்குதல்  நடத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது.

உக்ரைன் மீதான ராணுவ படையெடுப்பின் முதல் நாளில் 800 ரஷ்யா வீரர்களை இழந்ததாக உக்ரைன் பாதுகாப்பு துணை அமைச்சர் ஹன்னா மல்யார் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்த்து வந்தது. இதனால், ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரத்திலும் தாக்குதல்  நடத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது.

தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் போரில் உக்ரைன் படை வீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்திருந்தது. இன்று 2வது நாளாகவும் போர் நீடிக்கிறது என கூறப்படுகிறது. இதற்கிடையே, உங்களுக்கு நாங்களும் சளைச்சவங்க இல்ல என்ற விடா முயற்சியில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் சார்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுவிட்டன. ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக இணை அமைச்சர் ஹன்னா மால்யார்தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷ்யாவுக்கு எதிரான போராட்டத்தில் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!