
வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகையிலிருந்து இரண்டு பிளாக்குகள் தொலைவில் நடந்த துப்பாக்கிச்சூடு, அமெரிக்க தலைநகரின் பாதுகாப்பு அமைப்பையே உலுக்கியது. வெஸ்ட் வர்ஜீனியா தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த உடனேயே FBI, ரகசிய சேவை, மெட்ரோ காவல்துறை ஆகியவை இணைந்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்கின. அதிகாரிகள் இதை “குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்” என்று ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்பட்டது.
வெளியான கேமரா காட்சிகள்
சந்தேக நபர் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்காணிப்புக்கேமரா காட்சிகளில், அவர் வீரர்களை அணுகி திடீரென ஆயுதத்தை எடுத்து சுட்டது தெளிவாக பதிவாகியுள்ளது. தாக்குதலின் நோக்கம் என்ன என்பதை FBI தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இரு வீரர்களின் நிலையும் கவலைக்கிடம்
சுட்டுக் காயமடைந்த இரு வீரர்களுக்கும் CPR உட்பட அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மருத்துவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது என உறுதி செய்யப்பட்டது. தொடக்கத்தில் “வீரர்கள் இறந்தனர்” என்ற தவறான தகவல் பரவியதால் சிறிய குழப்பமும் ஏற்பட்டது.
சந்தேக நபரின் நோக்கம் குறித்து தீவிர விசாரணை
சந்தேக நபரை வீரர்களே சுட்டார்களா, அல்லது போலீஸ் பதிலடி கொடுத்தார்களா என்பது இன்று தெளிவாகவில்லை. தாக்குதல் குறிப்பிட்ட காரணத்திற்காக நடந்ததா, இல்லை வேறு பெரிய திட்டத்தின் பகுதியா என்று புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. சம்பவம் வெள்ளை மாளிகைக்கு மிக அருகில் நடந்ததால் பாதுகாப்பு பிரிவுகள் கூடுதல் எச்சரிக்கையில் உள்ளன.
சாட்சிகள் கூறிய தருணங்கள்
சம்பவத்துக்கு அருகில் இருந்த ஸ்டேசி வால்டர்ஸ், “இரண்டு பலத்த சத்தங்கள் கேட்டன, சில நொடிகளில் மக்கள் ஓடத் தொடங்கினர்” என்று கூறினார். சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்கள், மருத்துவ பணியாளர்கள் வீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்த காட்சிகள் காணப்பட்டன. பாதுகாப்புப் படையினர் உடனடியாக சீல் செய்தனர்.
தேசிய பாதுகாப்பு படை குவிப்பு
டிசியில் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டது ஏற்கனவே அரசியல் விவாதமாக இருந்தது. சமீபத்தில் சில வீரர்கள் தங்கள் பணியை நீட்டிக்க ஒப்புக்கொண்டிருந்தாலும், ஒரு மத்திய நீதிபதி படையினரை திரும்பப் பெற உத்தரவிட்டார். இப்படிப் பின்னணியில் நடந்த இந்த தாக்குதல், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் கொள்கை விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.