’பயங்கரவாதம் பாகிஸ்தானின் வேலை... சொர்க்கத்திற்கு அனுப்புவது எங்கள் வேலை...’ இந்தியா கடும் எச்சரிக்கை..!

By Thiraviaraj RM  |  First Published Sep 6, 2019, 6:34 PM IST

பாகிஸ்தானில் உண்பதற்கு உணவு இல்லை. ஆனால் பேச்சு மட்டும் பெரிதாக இருக்கிறது என முன்னாள் ராணுவத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங் கூறியுள்ளார்.


பாகிஸ்தானில் உண்பதற்கு உணவு இல்லை. ஆனால் பேச்சு மட்டும் பெரிதாக இருக்கிறது என முன்னாள் ராணுவத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தலைமை ஜெனரல் கியுமர் ஜாவேத் பாஜ்வா, ’’கடைசி குண்டும், கடைசி மூச்சும் உள்ளவரை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போராடும்’’ என்று இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் வி.கே.சிங், "முதலில் உங்களை நாட்டை கவனியுங்கள். பின்னர் போர் குறித்து பேசலாம்.

Latest Videos

காஷ்மீர் என்ற பெயரில் பாகிஸ்தான் இராணுவம் ஊழல் செய்கிறது. காஷ்மீர் இல்லை என்றால் அது எங்கே போகும்? "பஜ்வா அவர்களே முதலில் உங்கள் நாட்டின் நிலைமை மற்றும் உங்கள் இராணுவத்தின் நிலையைப் பாருங்கள், பின்னர் போரைப் பற்றி பேசுங்கள்.

பாகிஸ்தானில் உண்பதற்கு உணவு இல்லை. நிர்வாகத்திற்கு செலவு செய்ய பணம் இல்லை. ஆனால், பேச்சு மட்டும் பெரிதாக இருக்கிறது. பயங்கரவாதிகளின் ஊடுருவது அவர்களின் வேலை. அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புவது எங்கள் வேலை" எனத் தெரிவித்தார்.

click me!