"நான் ஒரு இந்து. நான் எனது அடையாளத்தை போலியாக மாற்றிக்கொள்ள மாட்டேன். இந்து மதமும் கிறிஸ்தவமும் பொதுவான மதிப்பு கொண்டவைதான்" என்று விவேக் ராமசாமி கூறியிருக்கிறார்.
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் விவேக் ராமசாமி, அமெரிக்காவுக்கு ஒரு இந்து அதிபர் ஆகலாம் என்று கூறியிருக்கிறார்.
"உங்கள் மதம் அமெரிக்க முன்னாள் தலைவர்களின் மதத்துடன் ஒத்துப் போகாததால், அவர் அமெரிக்க அதிபராக இருக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?" என்று கேள்வி எழுப்பிய அயோவாவைச் சேர்ந்த வாக்காளர் கன்னி மிட்செல்லுக்கு விவேக் ராமசாமி பதில் அளித்தார்.
அப்போது, "நான் ஒரு இந்து. நான் எனது அடையாளத்தை போலியாக மாற்றிக்கொள்ள மாட்டேன். இந்து மதமும் கிறிஸ்தவமும் பொதுவான மதிப்பு கொண்டவைதான்" என்று தெரிவித்தார்.
மேலும், "எனது மத நம்பிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு நபரும் ஒரு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஏனென்றால் கடவுள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் அனைவரும் சமமானவர்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எக்கச்செக்க பணத்தைக் கொட்டி எலான் மஸ்க் தொடங்கும் STEM பல்கலைகழகம்!
இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களின் பொதுவான அம்சங்களைப் பற்றியும் விவேக் ராமசாமி பேசியுள்ளார்.
"எனது வளர்ப்பு மிகவும் பாரம்பரியமானது. திருமணங்கள் புனிதமானது, குடும்பங்கள்தான் சமூகத்தின் அடித்தளம். விபச்சாரம் செய்வது தவறு. வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிப்பதற்கு எதையாவது விட்டுவிட வேண்டும் என்று என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்தனர்" என்று அவர் கூறினார்.
"இந்த நாட்டில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்கு ஏற்ற சிறந்த அதிபராக நான் இருப்பேனா என்று கேட்டால், நான் அப்படி இருக்க மாட்டேன் என்பேன்" என்று தெரிவித்த அவர், "ஆனால் நான் எப்போதும் அமெரிக்காவின் அடிப்படையான மதிப்பீடுகளின் பக்கம் இருப்பேன்" என்றும் அவர் கூறினார்.
38 வயதான விவேக் ராமசுவாமி தென்மேற்கு ஓஹியோவைச் சேர்ந்தவர். அவரது தாயார் ஒரு மனநல மருத்துவர். அவரது தந்தை ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்தார். பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் காரிலும் எஞ்சின் ஆயில் மாற்றணுமா?