அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 50%உயிரிழப்புக்கு காரணம் சலூன் கடைகள் தான் என்ற அந்நாட்டின் சுகாதாரத்துறை தலைவர் கூறியிருப்பது மனித குலத்திற்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் தான் கோர தாண்டவம் ஆடியுள்ளது. உலகளவில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் 7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் சமூக தொற்றாக பரவிவிட்டதால் அங்கு பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கும் பேரிழப்பு.
இந்தியாவில் 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 450 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அபாயகரமான தொற்று நோய் என்பதால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே முக்கியம் என்பதால், பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு கொரோனாவை தடுக்க போராடிவருகின்றன.
கொரோனா தொற்றுள்ளவரிடமிருந்து தும்மல், இருமல் மூலமான வெளிவரும் எச்சில் மூலமாகவோ, கொரோனா தொற்றுள்ளவர்கள் தொட்ட பொருட்களை தொட்டு, அப்படியே மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளில் வைப்பதன் மூலமாகவோ என அந்த தொற்றுள்ளவரிடமிருந்து எந்த வகையிலும் கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது என்பதால்தன, சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுவதுடன் தனிமைப்படவும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கடுமையான தடுப்பு நடவடிக்களை எடுக்கப்பட்டும் கூட, அங்கு பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது கொரோனா. அமெரிக்காவில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், அவர்களில் 50%க்கும் அதிகமானோருக்கு சலூன் கடைகளின் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உயிரிழந்தவர்களில் 50% இறப்புக்கு சலூன் கடைகள் பொறுப்பு என அந்நாட்டு சுகாதாரத்துறை தலைவர் ஜே ஆண்டனி தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சலூன் கடைகளில் கத்தரிக்கோல்கள், டிரிம்மர்கள், துணிகள் மற்றும் ஹேர்ஸ்டைலிங் செய்ய பயன்படும் மற்ற கருவிகளை அனைவருக்கும் அதே கருவிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. எனவே பாதுகாப்பற்ற இந்த முறையில், கொரோனா தொற்றுள்ள ஒருவரிமிடருந்து நிறைய பேருக்கு பரவும் அபாயம் இருக்கிறது. இப்படித்தான் அமெரிக்காவில் அதிகமாக பரவியிருக்கலாம் என்று சந்தேகிப்பதால் 50% இறப்புக்கு சலூன் கடைகள் தான் காரணம் என ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.
கொரோனாவிலிருந்து சர்வதேச சமூகம் மீண்டவுடன் இது முடிந்துவிடக்கூடிய விஷயம் அல்ல. இது ஒரு நீண்டகால சிக்கல். ஏனெனில் கொரோனாவிலிருந்து மீண்டபின்னர், சலூன் கடைகளுக்கு செல்வதிலும் அபாயம் உள்ளது. எனவே கொரோனாவிலிருந்து சர்வதேச சமூகம் மீண்டுவிட்ட பின்னர், மனித குலத்தின் நலனுக்காக, சலூன் கடைக்காரர்கள், பழைய உபகரணங்களை தூக்கிப்போட்டு புதிய உபகரணங்களை வாங்கி பயன்படுத்துவது அவர்களுக்கும் சமூகத்திற்கும் நல்லது. ஆனால் அது நடக்குமா என்பது தெரியவில்லை. எனினும் இப்படியொரு அபாயம் இருக்கிறது என்ற தகவல் வெளிவந்திருப்பது, மனித சமூகத்தை அலெர்ட் செய்யும் விஷயமாக அமைந்துள்ளது.