விண்வெளியில் மாபெரும் சரித்திர சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்; முழு விவரம்!

Published : Jan 31, 2025, 02:13 PM ISTUpdated : Jan 31, 2025, 02:14 PM IST
விண்வெளியில் மாபெரும் சரித்திர சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்; முழு விவரம்!

சுருக்கம்

அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியுமான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்க விண்வெளி வீராங்கனை இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி மூன்றாவது முறையாக விண்வெளிக்கு சென்றார். போயிங் ஸ்டார்லைனர் கேப்சூல் மூலம் அவர் விண்வெளிக்கு சென்றிருந்த நிலையில், அவருடன் புட்ச் வ்ல்மோர் என்பவரும் உடன் சென்றிருந்தார். இருவரும் அடுத்த 8 நாட்களில் அதாவது ஜூன் 14ம் தேதி பூமிக்கு திரும்ப இருந்தனர்.

ஆனால் அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் கேப்சூலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை சுமார் 7 மாதங்களுக்கு மேலாக சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியில் இருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி வரும் சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

மாபெரும் வரலாற்று சாதனை 

அதாவது விண்வெளியில் அதிக நேரம் நடைபயணம் (spacewalk) செய்த விண்வெளி ஆராய்ச்சியாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வ்ல்மோரின் 'ஸ்பேஸ் வாக்' 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தது. இருவரும் இணைந்த் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து செயலிழந்த வானொலித் தொடர்புப் பிரிவை அகற்றினார்கள்.

டெஸ்டினி ஆய்வகம் மற்றும் குவெஸ்ட் ஏர்லாக் ஆகியவற்றிலிருந்து மேற்பரப்பு பொருள் மாதிரிகளையும் பகுப்பாய்வுக்காக சேகரித்தனர். இது சுனிதா வில்லியம்ஸின் ஒன்பதாவது விண்வெளி நடைப்பயணமும், வில்மோரின் ஐந்தாவது விண்வெளி நடைப்பயணமும் ஆகும். இதுவரை விண்வெளியில் 62 மணி நேரம் 6 நிமிடங்களை கழித்துள்ள சுனிதா வில்லியம்ஸ், அதிக நேரம் விண்வெளியில் இருந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சனின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

எப்போது பூமிக்கு திரும்புவார்கள்?

இது தொடர்பாக ச‌ர்வதேச விண்வெளி நிலையம் (ISS) எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சனின் மொத்த விண்வெளி நடைப்பயண நேரமான 60 மணி நேரம் 21 நிமிடங்களை சுனிதா வில்லியம்ஸ் முறியடித்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் வியாழக்கிழமை (நேற்று) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 5.5 மணி நேர விண்வெளி நடைப்பயணத்திற்காக வெளியே வந்தனர்'' என்று கூறியுள்ளது.

மேலும் 92வது அமெரிக்க விண்வெளி நடைப்பயணத்தைக் குறிக்கும் வகையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, இந்த நிகழ்வை யூடியூப் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பியது. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், காணொலி வாயிலாக பூமியில் இருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். ''இவ்வளவு காலம் நாங்கள் இருவரும் விண்வெளியில் இருப்போம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை'' என்று அவர் தெரிவித்துள்ளர். 

களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் 

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. அமெரிக்காவில் புதிய அதிபராக பதிவியேற்றுக் கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது நெருங்கிய நண்பரும், உலகின் நம்பர் 1 பணக்கார தொழில் அதிபருமான எலான் மஸ்க்கிடம் பேசியுள்ளார். இத்தனை மாதம் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்காத முன்னாள் அதிபர் ஜோ பைடனையும் டிரம்ப் கண்டித்துள்ளார்.

டிரம்ப் பேசியது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், ''சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 2 விண்வெளி வீரர்களை விரைவில் பூமிக்கு அழைத்து வருமாறு ஸ்பேஸ் எக்ஸை அதிபர் (டிரம்ப்) கேட்டுக் கொண்டார். நாங்கள் அவ்வாறு செய்வோம். பைடன் நிர்வாகம் அவர்களை இவ்வளவு காலமாக விண்வெளியில் விட்டுச் சென்றது பயங்கரமானது" என்று கூறியுள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!