அவசியமில்லாம பாகிஸ்தானுக்கு போகாதீங்க... சீனாவை தொடர்ந்து... எச்சரிக்கிறது அமெரிக்கா!

 
Published : Dec 09, 2017, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
அவசியமில்லாம பாகிஸ்தானுக்கு போகாதீங்க... சீனாவை தொடர்ந்து... எச்சரிக்கிறது அமெரிக்கா!

சுருக்கம்

US warns citizens against travelling to Pakistan

அவசியம் இல்லாத நிலையில், பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தங்கள் நாட்டு பயணிகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு தேவையற்ற வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அறிவுறுத்தியுள்ளது. பல முறை இவ்வாறு எச்சரிக்கைகளை அந்நாடு, தங்கள் நாட்டு பயணிகளுக்கு அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. 

அமெரிக்காவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயங்கரவாதக் குழுக்களால் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மேலும், பிரிவினைவாத தாக்குதல்கள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளதால், இப்போது அமெரிக்கா இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பும், கடந்த மே 22  ஆம் தேதி இதேபோல் தங்கள் நாட்டு பயணிகளுக்கு, இவ்வாறான பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருந்தது.

இப்போது மீண்டும் அமெரிக்க வெளியுறவுதுறை இப்படி ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.  பாகிஸ்தான் தொடர்ச்சியான பயங்கரவாத வன்முறைகளை அனுபவித்து வருகிறது. பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள், மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடும் அரசு சாரா அமைப்புகளான என்.ஜி.ஓ. நிறுவன ஊழியர்கள், மூத்த பழங்குடியினர், சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் என பலரையும் குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல் பாகிஸ்தானில் நடத்தப் பட்டு வருகின்றன. 

பாகிஸ்தான் முழுதும் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் அமெரிக்க மக்களுக்கு எதிராக உள்ளன. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நேற்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இதே போன்ற எச்சரிக்கையை சீனாவும் வெளியிட்டிருந்தது. 

பாகிஸ்தானில் சீனர்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு எதிராகவும் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். சீனர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வெளியே செல்வதையும், கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்வதையும் சீனர்கள் தவிர்க்க வேண்டும் என்று சீன தூதரகம் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

PREV
click me!

Recommended Stories

அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..
நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!