ஒரே ஒரு பன்றியால் கோடீஸ்வரரான ஏழை விவசாயி! 

 
Published : Dec 04, 2017, 01:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
ஒரே ஒரு பன்றியால் கோடீஸ்வரரான ஏழை விவசாயி! 

சுருக்கம்

The Chinese farmer is a millionaire

குழந்தைகளுக்கு சளி தொல்லைகளை நீக்க கோரோசனை மாத்திரை, காலங்காலமாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மாட்டின் வயிற்றில்  இருந்து எடுக்கப்படும் பித்தம் என்று கூறப்படுகிறது. மாட்டின் வயிற்றில் சுரக்கும் ஒருவித மஞ்சள் நிறமுடைய பித்தம்தான் கோரோசனை. இது சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் பன்றியின் வயிற்றில் இருந்தும் கோரோசனை என்ற பித்த பொருள் எடுக்கப்படுகிறது. இதுவும் பலவிதமான நோய்களை தீர்க்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோரோசனை மதிப்பு வாய்ந்த பொருளாக இருந்து வருகிறது. சித்த மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தும் கோரோசனை விவசாயி ஒருவரின் கையில் கிடைத்ததால் தற்போது அவர் கோடீஸ்வரரான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தில் விதைப்பதற்காக நிலத்தை உழுதிருக்கிறார். அப்போது அவருக்கு வித்தியாசமான கல் போன்ற ஒரு பொருள் கிடைத்துள்ளது.

அந்த கல்லின் மீது அடர்த்தியான ரோமங்கள் மூடி இருந்தன. இந்த கல் பற்றி தனது நண்பர்களிடம் அவர் விசாரித்திருக்கிறார். அந்த கல், பன்றியின் பித்தப்பையில் உருவாகிய கோரோசனை என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். 4 இன்ச் நீளமும், 2.5 இன்ச் அகலமும் உள்ள இந்த கோரோசனைக் கல்லை விற்று அந்த விவசாயி தற்போது கோடீஸ்வரராகி உள்ளாராம்.

PREV
click me!

Recommended Stories

அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..
நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!